2021 முடிவதற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதா ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்? வெளியான தகவல்

பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 முடிவதற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதா ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்? வெளியான தகவல்

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் 2021 கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை கடந்த ஏப்ரலில் உலகளவில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து கோடியாக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு நிலவியது.

2021 முடிவதற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதா ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்? வெளியான தகவல்

இந்த நிலையில் தற்போது கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் நடப்பு 2021ஆம் ஆண்டின் நான்காம் கால்பகுதியில் அறிமுகமாகலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்பதால் புதிய கோடியாக்கில் மாற்றங்கள் காரின் முன்பக்கத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளன.

2021 முடிவதற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதா ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்? வெளியான தகவல்

முன்பக்கத்தில் பெரிய ரேடியேட்டர் க்ரில்லை கொண்டுள்ள 2021 கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் திருத்தியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், ரீடிசைனில் முன் மற்றும் பின்பக்க பம்பர்கள், விங்லெட்களுடன் பின்பக்க ஸ்பாய்லரை பெற்றுள்ளது.

2021 முடிவதற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதா ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்? வெளியான தகவல்

அதேபோல் காரின் அலாய் சக்கரங்களின் ஸ்டைலும் திருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் மடக்கக்கூடிய & மஸாஜ் செயல்பாட்டுடன் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள், 10.25 இன்ச் விர்டியுவல் காக்பிட், இணைப்பு கார் தொழிற்நுட்பத்துடன் 9.2 இன்ச்சில் தொடுத்திரை ஹெட்-யூனிட்டை கொண்டுள்ளது.

2021 முடிவதற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதா ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்? வெளியான தகவல்

இவற்றுடன் கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், முன் கதவுகளில் 2 கூடுதல் ஸ்பீக்கர்களையும் புதிய கோடியாக் மாடல் பெற்றுள்ளது. மற்றப்படி டேஸ்போர்டு டிசைன் தற்சமயம் விற்பனையில் இருக்கும் கோடியாக்கையே ஒத்து காணப்படுகிறது.

2021 முடிவதற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதா ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்? வெளியான தகவல்

கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழக்கமான பிஎஸ்6 2.0 லிட்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினே தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் மாடல்களில் வழங்கப்படுகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2021 முடிவதற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதா ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்? வெளியான தகவல்

டிரான்ஸ்மிஷன் தேர்வாக 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதேநேரம் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும் வழங்கப்பட உள்ளது. ஸ்கோடா கோடியாக்கிற்கு விற்பனையில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ், எம்ஜி க்ளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda planning to launch BS6 Kodiaq facelift soon in India, find here all details in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X