ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

அடுத்த-தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் இந்திய அறிமுகம் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ அடுத்ததாக குஷாக் எஸ்யூவி, கோடியாக் ஃபேஸ்லிஃப்ட், ஒரு செடான் என சில கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்க தயாராகி வருகிறது. இவை நடப்பு 2021ஆம் ஆண்டிற்கானவையாக இருக்கலாம்.

ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

இவற்றை தொடர்ந்து அடுத்த 2022ஆம் ஆண்டில் புதிய தலைமுறை ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் செயல்திறன்மிக்க வேரியண்ட்டாக பார்க்கப்படும் ஆர்எஸ் வெர்சன் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு (CBU முறையில்) விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

மற்ற வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள நான்காம் தலைமுறை ஆக்டேவியா ஆர்எஸ் கார் கருப்பு நிற க்ரில் மற்றும் ஸ்மோக்டு எஃபெக்ட்டில் ஹெட்லேம்ப்கள், பின்பக்கத்தில் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் இரட்டை நிறத்தில் அலாய் சக்கரங்கள் என மிகவும் ஸ்போர்டியான வெளிப்புற தோற்றத்தை பெற்றுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

இதன் அலாய் சக்கரங்கள் 18-இன்ச் மற்றும் 19-இன்ச் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. உட்புறத்தில் அல்காண்ட்ரா உள்ளமைவில் மசாஜ் செயல்பாடுகளுடன் மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. கேபின் ஃபாக்ஸ் கார்பன் ஃபைபரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

ஐரோப்பாவில் புதிய ஆக்டேவியா ஆர்எஸ் கார் ஒரே ஒரு 2.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 241 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த என்ஜின் -ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் தான் இந்திய சந்தைக்கும் கொண்டுவரப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஸ்கோடா ஆக்டேவியா மட்டும் இல்லைங்க, அதன் ஆர்.எஸ் வெர்சனும் இந்தியா வருது!! ஆனா கொஞ்ச காலம் வெயிட் பண்ணனும்...

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் மின்சாரம் மூலமாக தகவமைப்பு ஆகக்கூடிய சஸ்பென்ஷன் மற்றும் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஸியல் உடன் டைனாமிக் சேசிஸ் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. இதனாலேயே இந்த செயல்திறன்மிக்க வெர்சன் ஸ்டாண்டர்ட் ஆக்டேவியாவை காட்டிலும் 15மிமீ தாழ்வாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Next-gen Skoda Octavia RS India launch expected in 2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X