விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

ஸ்கோடா நிறுவனம் விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்ற தனது என்யாக் iV எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஸ்கோடா ஈடுபட்டுள்ளது.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

இந்தியாவில் தனது வர்த்தகத்தை மிக வலுவான நிலைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை ஸ்கோடா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. புராஜெக்ட் 2.0 என்ற பெயரில் இந்திய வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கார் மாடல்களை களமிறக்கி வருவதுடன், முதலீட்டு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குஷாக் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் வர்த்தகத்தில் சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

மேலும், எதிர்கால வர்த்தகத்தை மனதில் வைத்து எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதற்கும் பரிசீலித்து வருகிறது. அந்த வகையில், தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான என்யாக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

அடுத்த ஆண்டு புதிய ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. இதனால், இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மீதான எதிர்பார்ப்பு வெகுவாக உயர்ந்து வருகிறது.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் எஸ்யூவி உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து இந்த எஸ்யூவியை கூடிய விரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

புதிய ஸ்கோடா எஸ்யூவியின் டிசைன் மிகவும் அருமையாக இருக்கிறது. பிரிமீயம் எஸ்யூவி மாடலுக்கு உரிய அந்தஸ்துடன் காட்சி தரும் இந்த எஸ்யூவியில் ஒளிரும் பின்னணியுடன் பாரம்பரியமான வண்ணப்பூச்சி வடிவிலான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகளுடன் வசீகரிக்கிறது. தவிரவும், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 13 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மசாஜ் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

புதிய ஸ்கோடா என்யாக் எஸ்யூவி செயல்திறனை பொறுத்து 5 விதமான வேரியண்ட்டுகலில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்கோடா என்யாக் 50, 60, 80, 80எக்ஸ் மற்றும் விஆர்எஸ் ஆகிய வேரியண்ட் பெயர்களில் வழங்கப்படுகிறது. இதில், என்யாக் 50 மாடலில் 52kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் அதிகபட்சமாக 148 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் என்பதுடன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

அடுத்து என்யாக் 60 மாடலில் 58kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது 179 பிஎஸ் பவரை வெளிப்படுத்துவதுடன் 390 கிமீ வரை பயணிக்கும் அடுத்து 80 மாடலில் 77kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியும் மின் மோட்டாரும் சேர்ந்து 204 பிஎஸ் பவரை வழங்குவதுடன் 510 கிமீ ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கிறது. இதுவரையிலான மூன்று வேரியண்ட்டுகளிலும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

நான்காவதாக என்யாக் 80எக்ஸ் வேரியண்ட்டில் 77kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருப்பதுடன் 265 பிஎஸ் பவரை வழங்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 460 கிமீ ரேஞ்ச் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிசெயல்திறன் மிக்க விஆர்எஸ் வேரியண்ட்டில் 77kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. 305 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த இந்த வேரியண்ட்டானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 460 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த இரண்டு வேரியண்ட்டுகளிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார்!

புதிய ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த கார் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda is planning to launch Enyaq iV electric car in India by next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X