ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

ஸ்கோடா ரேபிட் காரில் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும் விஷயமாக அமைந்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்சின், அதிக வசதிகளுடன் மிக சவாலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்கோடா ரேபிட் கார் ரைடர், ரைடர் ப்ளஸ், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், ரைடர் பேஸ் வேரியண்ட் ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்தது.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

போட்டியாளர்களைவிட இந்த காரின் பேஸ் வேரியண்ட் விலை லட்சங்களில் வித்தியாசம் இருந்ததால், பலரும் முண்டியடுத்து புக்கிங் செய்தனர். இந்த சூழலில், பேஸ் வேரியண்ட்டிற்கு அதிக டிமான்ட் இருந்ததால், டெலிவிரி கொடுப்பதில் உள்ள சிரமங்களை மனதில் வைத்து புக்கிங் நிறுத்தப்பட்டது.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

மேலும், ரைடர் ப்ளஸ் என்ற வேரியணட்டை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புத்தாண்டு துவங்கி இருக்கும் இந்த சூழலில், ரேபிட் காரில் ரைடர் என்ற பேஸ் வேரியண்ட்டை மீண்டும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

தற்போது ரேபிட் காரின் ரைடர் வேரியண்ட்டிற்கு ரூ.7.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ரூ.30,000 கூடுதல் விலையில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

இருந்தாலும், தொடர்ந்து போட்டியாளர்களைவிட மிக சவாலான ஆரம்ப விலையில் ஸ்கோடா ரேபிட் கார் தொடர்ந்து கிடைக்கும் என்பது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயமாக இருக்கும். ஸ்கோடா ரேபிட் ரைடர் வேரியண்ட்டில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அனைத்து வசதிகளும் தொடர்ந்து கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

ஸ்கோடா ரேபிட் ரைடர் வேரியண்ட்டில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, முன்புறத்திலும், பின்புறத்திலும் சார்ஜிங் சாக்கெட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

ஸ்கோடா ரேபிட் காரில் ரைடர் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பிற வேரியண்ட்டுகளின் விலை ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரைடர் ப்ளஸ் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.8.19 லட்சமும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.9.69 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்-6 மாடலில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!

ஸ்கோடா ரேபிட் காரில் ரைடர் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பிற வேரியண்ட்டுகளின் விலை ரூ.20,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரைடர் ப்ளஸ் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.8.19 லட்சமும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.9.69 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் காரின் விலை உயர்ந்த மான்ட்டே கார்லோ எடிசன் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.11.99 லட்சமும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.13.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto has re-introduced the entry-level 'Rider' variant of the Rapid sedan in the Indian market. The new Skoda Rapid Rider has been relaunched in India with a price tag of Rs 7.79 lakh; this is Rs 30,000 more than its previous list price. All prices are ex-showroom (Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X