Just In
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 13 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நன்கு விசாலமான உட்புற கேபினுடன் உருவாகும் புதிய ஸ்கோடா குஷாக்!! இதற்காகவே இந்த காரை வாங்கலாம் போலயே!
ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரின் உட்புற கேபினை வெளிக்காட்டும் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடாவின் அடுத்த இந்திய அறிமுக மாடலான குஷாக் எஸ்யூவி காரின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளின் ஸ்கெட்ச் படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தற்போது இந்த எஸ்யூவி காரின் உட்புற கேபினின் ஸ்கெட்ச் படங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட எம்க்யூபி ஏ0-இந்தியா ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய குஷாக், ஸ்கோடாவின் இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிவரவுள்ளது.

பெரிய தோற்றம் கொண்ட ஸ்கோடாவின் மற்ற எஸ்யூவி கார்களான கோடியாக் மற்றும் கரோக் கார்களின் வெளிப்புறத்தை பெரிய அளவில் ஒத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் குஷாக்கின் இந்த புதிய ஸ்கெட்ச் படங்களின் மூலம் இந்த காரின் உட்புறத்தில் வழங்கப்படவுள்ள அம்சங்கள் மீண்டும் உறுதியாகின்றன.

இந்த படங்களில் காரின் மைய கன்சோலில் 10 இன்ச் திரை உடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. முன்பக்க க்ரில்லிற்கு இணையாக உட்புறத்தில் கேரக்டர் லைன் ஒன்று செல்வதையும் இந்த ஸ்கெட்ச் படங்கள் வெளிக்காட்டுகின்றன.

கிட்டத்தட்ட மற்ற நடுத்தர அளவு வாகனங்களின் பரிமாண அளவுகளில் வடிவமைக்கப்பட்ட போதிலும், விசாலமான உட்புறத்துடன் குஷாக்கை ஸ்கோடா நிறுவனம் தயாரிக்கிறது. இதனை வாடிக்கையாளர்களுக்கு கூறும் நோக்கத்திலேயே தற்போது இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் புதிய பாதுகாப்பு மற்றும் பிஎஸ்6 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக உருவாக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் 6 காற்றுப்பைகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சறுக்கலை கட்டுப்படுத்தும் உதவி, டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம் உள்ளிட்டவற்றை பெற்று வரவுள்ளது.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த புதிய ஸ்கோடா எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல்/ 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா பிராண்டின் முதல் 5-இருக்கை எஸ்யூவி காராக இந்தியாவில் அறிமுகமாகும் குஷாக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். விற்பனையில் இதற்கு ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் முக்கிய போட்டி மாடல்களாக விளங்கும்.