குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

ஸ்கோடாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரான குஷாக்கின் வெளிபுறத்தை காட்டும் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

ஸ்கோடா இந்தியா நிறுவனம் அதன் முற்றிலும் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி காராக குஷாக்கை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. முன்னதாக இந்த எஸ்யூவி கார் விஷன் இன் கான்செப்ட் மாடலாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குஷாக் தான் ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் இந்தியா 2.0 திட்டத்தில் முதலாவதாக வெளிவந்துள்ள காராகும்.

குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினை சமாளித்துவரும் நிலையில் ஸ்கோடா குஷாக் தொடர்பான புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் யுடியுப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ குஷாக்கின் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

குஷாக் எஸ்யூவி காரின் முன்பக்க பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில்லிருந்து ஆரம்பிக்கும் இந்த டீசர் வீடியோ காரை சுற்றிலும் ப்ரீமிய தர தோற்றத்திற்காக க்ரில் அமைப்பை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள க்ரோம் கார்னிஷ் மற்றும் கூர்மையான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை கொண்ட ஹெட்லேம்ப்பை பற்றியதாக உள்ளது.

குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

ஹெட்லைட்கள் ஸ்கோடாவின் க்றைஸ்ட்லைன் எல்இடி டிஆர்எல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஸ்கோடாவின் மற்ற எஸ்யூவி கார்களின் தோற்றத்தை கொண்டிருந்தாலும், அதேநேரம் குஷாக் தனக்கென்று தனி அடையாளங்களையும் கொண்டுள்ளது.

குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

பின்பக்கத்தில் பிளவுப்பட்ட எல்இடி டெயில்லைட்களை கொண்டுள்ளது. இவ்வாறான வடிவத்தில் தான் தற்போதைய பெரும்பாலான மாடர்ன் கார்கள் டெயில்லைட்டை கொண்டுள்ளன. டெயில்லேம்ப்களுக்கு கீழே ஒளி எதிரொலிப்பான்கள் வழங்கப்படுகின்றன.

குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

பின்பக்க பம்பர் ஆனது அடியில் சில்வர் நிற ஃபாக்ஸ் சறுக்கு தட்டுடன் இரட்டை நிறத்தில் வழங்கப்படுகிறது. பின்பக்கத்தை காட்டும் கேமிரா மற்றும் பதிவு எண் தட்டிற்கான எல்இடி விளக்குகள் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக செயல்படக்கூடிய அட்ஜெஸ்டபிள் ஒஆர்விஎம்-களையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இரட்டை நிறத்தில் 17 இன்ச்சில் பெரியதாக வழங்கப்படுகின்ற அலாய் சக்கரங்கள் மற்றுன் எலக்ட்ரிக் சன்ரூஃப் தான் காரின் வெளிப்புற தோற்றத்திற்கு ப்ரீமியம் தொடுதலை வழங்குகிறது என்பதை ஒத்து கொண்டே ஆக வேண்டும்.

குஷாக் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த ஆரம்பித்தது ஸ்கோடா!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

சன்ரூஃப் உடன் காரின் மேற்கூரையில் தண்டவாளங்களும், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனாவையும் வழங்கப்படுகின்றன. வெளிப்புறத்தை தாண்டி காரின் உட்புறம் இந்த டீசர் வீடியோவில் அவ்வளவாக காட்டப்படவில்லை.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda Kushaq New TVC showcases exterior design details of the upcoming compact SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X