கண்களை கொள்ளை கொள்ளும் புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ வீடியோ!

அழகிய செடான் கார்களுடன் வாடிக்கையாளர்களை வசியம் செய்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தற்போது ஸ்லாவியா என்ற புத்தம் புதிய மிட்சைஸ் செடான் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் மீடியா முன்னிலையில் வெளியிடப்பட்ட இந்த காரின் பிரத்யேக வீடியோவை இந்த செய்தியில் இணைத்துள்ளோம்.

 புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார்... ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ வீடியோ!

ஸ்கோடா ஸ்லாவியா கார் டிசைனில் மிகவும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இதன் ரகத்தில் அதிக வீல்பேஸ் நீளம் மற்றும் அகலமுடைய கார் மாடலாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்திலும் போதுமான இடவசதியை வழங்குகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது விற்பனையில் உள்ள ஸ்கோடா ரேபிட் காருக்கு மாற்றாக புதிய ஸ்லாவியா கார் வர இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda slavia first look review video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X