விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

ஸ்கோடா இந்தியா நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே நமக்கு மிக சிறப்பான செடான் கார்களை வழங்கி வருகிறது. ஆக்டோவியா மூலமாக ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் கால் பதித்தது. இது இந்தியர்கள் பலராலும் விரும்பப்படும் செடான் கார் ஆகும். இது பல வழிகளில் தனித்துவமானது. இதன்பின் லயூரா, சூப்பர்ப் மற்றும் ரேபிட் ஆகிய கார்கள் வந்தன. இந்த வரிசையில் தற்போது புதிய செடான் கார் ஒன்று விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியா காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இது ஸ்கோடா ரேபிட் காருக்கு மாற்றாக வரவுள்ளது. ஸ்கோடா ரேபிட் மிகவும் அருமையான மிட்-சைஸ் செடான் கார் ஆகும். அதற்கு மாற்றாக ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்றால், ஸ்கோடா நிறுவனம் மிகவும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அதற்கு ஏற்றபடியே ஸ்கோடா ஸ்லாவியா கார் இருக்கிறது. செக் குடியரசு நாட்டில் பேசப்படும் 'செக்' (Czech) மொழியில் ஸ்லாவியா என்றால் 'மகிமை' என்று அர்த்தம். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கோடா ஸ்லாவியா கார் பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

டிசைன்

ஸ்கோடா ஸ்லாவியா காரின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் வழக்கமான டிசைன் அம்சங்களை ஸ்லாவியா காரிலும் பார்க்க முடிகிறது. முன் பகுதியில் க்ரோம் பூச்சுக்களுடன் கூடிய பட்டர்பிளை க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பின் பக்கவாட்டில் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இது எல்இடி யூனிட் ஆகும். இதற்குள் 'L' வடிவ எல்இடி டிஆர்எல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இந்த காரில் வட்ட வடிவ பனி விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஹாலோஜன் யூனிட் ஆகும். இந்த காரின் பானெட்டில் இடம்பெற்றுள்ள லைன்கள், காரை கம்பீரமாக காட்டுகின்றன. ஸ்கோடா ஸ்லாவியா காரின் பக்கவாட்டிலும் லைன்களை காண முடிகிறது. மேலும் விண்டோக்களுக்கு கீழே இடம்பெற்றுள்ள லைனில் க்ரோம் வழங்கப்பட்டுள்ளது. டோர் ஹேண்டில்களிலும் க்ரோம் பட்டை இடம்பெற்றுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரின் ரூஃப்லைன் பின் பகுதியில் தாழ்ந்தவாறு கொடுக்கப்பட்டுள்ளது. இது கூபே கார்களின் பின் பகுதியை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த காரில் சுறா துடுப்பு ஆன்டெனாவும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த காரில் 16 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் பார்வையிட்ட காரில், ட்யூயல் டோன் டைமண்ட்-கட் வீல்கள் வழங்கப்பட்டிருந்தன. ஸ்லாவியா காரில் மூன்று அலாய் வீல் ஆப்ஷன்கள் இருப்பதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

வேரியண்ட்கள் மற்றும் வண்ண தேர்வுகள்

ஸ்கோடா ஸ்லாவியா கார் மூன்று வேரியண்ட்களிலும், ஐந்து வண்ண தேர்வுகளிலும் கிடைக்கும்.

ஸ்கோடா ஸ்லாவியா வேரியண்ட்கள்

ஆக்டிவ்

ஆம்பிஷன்

ஸ்டைல்

ஸ்கோடா ஸ்லாவியா வண்ண தேர்வுகள்

டொரோண்டோ ரெட்

கேண்டி ஒயிட்

கார்பன் ஸ்டீல்

ரெஃப்லெக்ஸ் சில்வர்

க்ரிஸ்டல் ப்ளூ

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இன்டீரியர்

பொதுவாக ஸ்கோடா நிறுவன கார்களின் இன்டீரியர் சௌகரியமாகவும், பிரீமியம் ஆகவும் இருக்கும். ஸ்லாவியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கதவை திறந்ததும், விசாலமான ட்யூயல் டோன் இன்டீரியர் நம்மை வரவேற்கிறது. பிரீமியமான ஒரு காருக்குள் நுழைந்த உணர்வு உடனடியாக நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

இன்டீரியரில் 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல்தான் நமது கண்களில் முதலில் தென்படுகிறது. ஸ்கோடா குஷாக் காரில் இருந்து இந்த ஸ்டியரிங் வீல் பெறப்பட்டுள்ளது. இதில், மியூசிக் மற்றும் போன் கால்களுக்கான கண்ட்ரோல்கள் இடம்பெற்றுள்ளன. இது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் உடன் கூடிய டாப் மாடல் ஆகும். இந்த காரின் ஸ்டியரிங் வீலின் பின் பகுதியில் பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

அதே சமயம் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பணிகளை எட்டு இன்ச் டிஎஃப்டி ஸ்க்ரீன் கவனித்து கொள்கிறது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரான இது, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணம் செய்யலாம்? தற்போதைய எரிபொருள் சிக்கனம், சராசரி எரிபொருள் சிக்கனம், எரிபொருள் அளவு, ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் உள்பட பல்வேறு தகவல்களை வழங்குகிறது.

அதே நேரத்தில் இந்த காரின் டேஷ்போர்டு ஹார்டு-டச் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மைய பகுதியில் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இது 10 இன்ச் யூனிட் ஆகும். இதில், கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை இது சப்போர்ட் செய்யும். இந்த காரில் உயர்தரமான ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. டாப் மாடலான ஸ்டைல் வேரியண்ட்டில், சப்-வூஃபரும் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இன்போடெயின்மெண்ட் திரைக்கு கீழே சென்டர் ஏசி வெண்ட்களும், அதற்கு கீழே ஏர் கண்டிஷனிங்கிற்கான கண்ட்ரோல்களும் இடம்பெற்றுள்ளன. ஏசியை கட்டுப்படுத்துவதற்கு பட்டன்களோ, ஸ்லைடர்களோ வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக டச் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டச் பேனலும், டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் துல்லியமாக இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதும் எளிமையாக இருக்கிறது. இந்த காரின் சென்டர் கன்சோலும் பிரீமியமாக இருக்கிறது. டேஷ்போர்டின் இரு முனைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஏசி வெண்ட்கள் வட்ட வடிவில் உள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இன்ஜின்

MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 யுக்தியின் கீழ் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பு இதுவாகும். ஸ்கோடா ஸ்லாவியா காரின் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் காம்பினேஷன் ஸ்கோடா குஷாக் காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரில் இரண்டு இன்ஜின் தேர்வுகளும், மூன்று டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இதன்படி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை ஸ்கோடா ஸ்லாவியா கார் பெற்றுள்ளது.

இதில், 1.0 லிட்டர் இன்ஜின் மூன்று சிலிண்டர் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்மில் 113.5 பிஹெச்பி பவரையும், 1,750-4,500 ஆர்பிஎம்மில் 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்களை தேர்வு செய்யலாம்.

அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜின் நான்கு சிலிண்டர் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்மில் 148 பிஹெச்பி பவரையும், வெறும் 1,500 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ்களை தேர்வு செய்யலாம்.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

நடைமுறை பயன்பாடு

ஸ்கோடா செடான் கார்களின் ரைடு குவாலிட்டி பொதுவாக மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் ஸ்லாவியா காரின் ரைடு குவாலிட்டி பற்றி நாங்கள் தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த காரை நாங்கள் இன்னும் ஓட்டி பார்க்கவில்லை. ஆனால் இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதா? என்பதை எங்களால் சொல்ல முடியும்.

ஸ்கோடா ஸ்லாவியா காரின் முன் இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனவே மிக நீண்ட நேரம் கூட காரை சௌகரியமாக ஓட்ட முடியும். ஒட்டுமொத்தத்தில் முன் இருக்கைகள் மிகவும் சௌகரியமாக இருக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

அதேபோல் இந்த காரின் பின் இருக்கையும் சௌகரியமாக இருக்கிறது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் வீல்பேஸ் 2,651 மிமீ ஆகும். இது இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் அதிகமானது. இதன் மூலம் லெக் ரூம் உள்பட இடவசதி மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் அகலம் 1,752 மிமீ ஆகும். இந்த காரில் பின் இருக்கை பயணிகளுக்கு மடித்து வைக்க கூடிய ஆர்ம்ரெஸ்ட்டும், கப் ஹோல்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், டோர் பாக்கெட்கள் ஆகிய இடங்களிலும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் இருக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரப்போகுது... Skoda Slavia கார் எப்படி இருக்கு தெரியுமா? ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

ஸ்கோடா ஸ்லாவியா காரின் பூட் ஸ்பேஸ் 521 லிட்டர்கள். இந்த செக்மெண்ட்டிலேயே இதுதான் அதிகமாகும். இந்த காரின் பின் இருக்கைகளை மடித்து வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் பூட் ஸ்பேஸை 1,050 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும் என ஸ்கோடா நிறுவனம் கூறுகிறது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda slavia mid size sedan first look review design interior engine specifications
Story first published: Monday, November 22, 2021, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X