புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையிலும் புதிய குஷாக் எஸ்யூவியை குறித்த நேரத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் ஸ்கோடா ஆட்டோ இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி, விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதும் உறுதியாகி இருக்கிறது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் வர்த்தகப் பணிகளில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையை வழக்கம்போல் கொரோனா பதம் பார்க்கத் துவங்கி இருக்கிறது. கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, புதிய கார்களின் அறிமுகத்தை பல நிறுவனங்கள் ஒததி வைத்து வருகின்றன.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

இந்த சூழலில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது புதிய குஷாக் எஸ்யூவியின் அறிமுகத்தை ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் 18ந் தேதி குஷாக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்ட போது, வரும் ஜூலையில் ஷோரூம்களுக்கு வந்துவிடும் என்ற தகவல் வெளியானது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

இந்த தகவலை இப்போது ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஸாக் ஹொல்லிஸ் உறுதிப்படுத்தி உள்ளார். இதன்மூலமாக, அடுத்த சில வாரங்களில் குஷாக் விலை அறிவிப்பு வெளியிடப்பட்டு விடும்.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

வரும் ஜூலை மாதத்தில் புதிய குஷாக் எஸ்யூவி ஷோரூம்களுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். முன்பதிவு செய்பவர்களுக்கு ஜூலையில் இருந்து டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என்று தெரிகிறது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் டிசைன் எல்லோரையும் கவரும் வகையில் இருப்பதால் அதிக வரவேற்பை பெறும் என்று தெரிகிறது. அத்துடன், தொழில்நுட்ப வசதிகளிலும் சிறப்பானதாக இருக்கும்.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இந்த இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இந்த எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

 புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்காக வெயிட் பண்றீங்களா? ஒரு சந்தோஷமான செய்தி!

புதிய குஷாக் எஸ்யூவி அறிமுகத்தை தொடர்ந்து, புதிய ஆக்டேவியா காரையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda #skoda kushaq
English summary
Skoda is all set to launch all new Kushaq SUV in India very soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X