Just In
- 1 hr ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 2 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 4 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 4 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
குட் நியூஸ்.. அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் சிறப்பு முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாளன் தயார்... குஷாக் எஸ்யூவி காரை உலகளவில் வெளியீடு செய்த ஸ்கோடா!
ஸ்கோடா நிறுவனம் ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு போட்டியளிக்கக் கூடிய வகையில் குஷாக் எஸ்யூவி காரை வெளியீடு செய்துள்ளது. விரைவில் இக்காரை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது ஸ்கோடா. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய வாகன சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் நோக்கில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஸ்கோடா ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில் அடுத்த 12 மாதங்களில் நான்கு புதிய கார் மாடல்களைக் களமிறக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ஒன்றான குஷாக் எனும் புதுமுக எஸ்யூவி ரக காரை நிறுவனம் இன்று (மார்ச் 18) உலகளவில் அறிமுகம் செய்தது ஸ்கோடா.

இந்த காரை கடந்த சில மாதங்களாகவே ஸ்கோடா நிறுவனம் இந்திய சாலைகளில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தி வந்தது. இந்த நிலையிலேயே தற்போது குஷாக் எனும் பெயரில் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இதன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த ஸ்கோடா வாகன பிரியர்களுக்கு இது வரபிரசாதமாக அமைந்திருக்கின்றது.

முன்னதாக விஷன் ஐஎன் எனும் பெயரில் இக்காரை ஸ்கோடா நிறுவனம் முன்னிலைப் படுத்தி வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையிலேயே மிக சமீபத்தில் இதன் பெயர் குஷாக் மாற்றப்பட்டது, தற்போது, இதே பெயரில் வெளியீட்டையுயம் சந்தித்திருக்கின்றது.

ஜனவரி மாதமே இந்த பெயரை நிறுவனம் அறிவித்தது. ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் 2.0 திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்கீழே நான்கு புதிய மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இதில் முதல் மாடலாக குஷாக் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

95 சதவீத உள்ளூர் தயாரிப்பு பாகங்களைக் கொண்டே இந்த காரை ஸ்கோடா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இதன் விலை மிக குறைவாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் இந்த காருக்கான விலையை நிறுவனம் அறிவிக்கவில்லை.

கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக வர இருப்பதால் இவற்றின் விலைக்கு டஃப் கொடுக்கும் வகையில் குறைந்த விலையை குஷாக் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய குஷாக் 4.25 மீட்டர் நீளத்தையும், 188 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 385 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கின்றது.

புதிய ஸ்கோடா குஷாக் கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஒன்று 1.0 லிட்டர் டிஎஸ்ஐ தொழில்நுட்பத்திலும் (115 பிஎஸ் மற்றும் 175என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது), மற்றொன்று 1.5 லிட்டர் டிஎஸ்ஐ (150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது) தரத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

தொடர்ந்து, இவ்விரு எஞ்ஜின்களிலும் இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. அதாவது, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் தேர்வுகளும், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு நேரடி ஷிஃப்ட் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக ஐந்து வித நிற தேர்வுகளில் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. கார்பன் ஸ்டீல், ரெஃப்ளக்ஸ் சில்வர், கேண்டீ வெள்ளை, டொர்னடோ சிவப்பு மற்றும் தேன் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த காரை ரூ. 10 லட்சம் தொடங்கி ரூ. 16 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல. மிக விரைவில் விலை குறித்த தகவலை நிறுவனம் வெளியிட இருக்கின்றது. ஸ்கோடா குஷாக் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.