ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ஸ்கோடா ஸ்லாவியா நடுத்தர-அளவு செடான் கார் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கான இந்த ஸ்கோடா செடான் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

இந்திய வாடிக்கையாளர்களின் இரசனைக்கும், இந்திய சாலைகளுக்கும் ஏற்ப எம்க்யூபி ஏ0-இன் (இந்தியா) ப்ளாட்ஃபாரத்தில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அதன் புதிய கார்களை உருவாக்கி வருகிறது. இதன்படி இந்த ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட குஷாக் காம்பெக்ட் எஸ்யூவி கடந்த ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

அதனை தொடர்ந்து ஸ்கோடாவின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இதே ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட அதன் டைகுன் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தான் தற்போது ஸ்கோடா நிறுவனம் இந்த ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட தனது இரண்டாவது மாடலாக ஸ்லாவியா செடான் காரை இணையம் வாயிலாக வெளியிட்டுள்ளது.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

இந்த ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் கார்கள் கிட்டத்தட்ட 95% இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்படுவதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது. ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணியின் இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டு வரும் எம்க்யூபி ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தின் முதல் கட்டமாக எஸ்யூவி கார்கள் (குஷாக், டைகுன்) அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக இந்த செடான் கார் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முன்பு விற்பனையில் இருந்த ராபிட் செடானின் இடத்தை நிரப்பும் பொருட்டு ஸ்லாவியா கொண்டுவரப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில் புதிய ஸ்லாவியாவும் ஸ்கோடாவின் அடையாள பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் அமைப்பை கருப்பு நிற செங்குத்தான ஸ்லாட்களுடன் பெற்றுள்ளது.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

இவற்றுடன் இதன் முன்பக்கத்தில் ஏகப்பட்ட பகுதிகளில் க்ரோம் தொடுதல்கள் பார்க்க முடிகிறது. எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் இரு பக்கங்களிலும் எல்இடி டிஆர்எல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தின் கீழ் பகுதி தேன்கூடு வடிவிலான டிசைனில் ஏர் டேம்-ஐயும், ஃபாக் விளக்குகளையும் கொண்டுள்ளது. மொத்தமாக ஸ்லாவியாவின் முன்பக்கம் நமக்கு குஷாக் எஸ்யூவி காரையே நினைவூட்டுகிறது.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

பக்கவாட்டில் 16-இன்ச் இரட்டை-நிற அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் காரின் உடல் நிறத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. ஸ்லாவியா முத்திரை காரின் முன்பக்க ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ளது. பி-பில்லர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. பின்பக்கத்தில் இந்த நடுத்தர-அளவு செடான் கார் C-வடிவில் எல்இடி டெயில்லைட்களை கொண்டுள்ளது.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

அத்துடன் பூட் பகுதியில் 'SKODA' எழுத்துகள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா மற்றும் பின்பக்க கதவில் பொருத்தப்பட்ட நம்பர் ப்ளேட் உள்ளிட்டவற்றையும் இதன் பின்பக்கத்தில் பார்க்க முடிகிறது. குஷாக்கை போல் ஸ்லாவியாவும் ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

உட்புறத்தில் 2022 ஸ்கோடா ஸ்லாவியாவில் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உடன் 10-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மடக்கும் வசதி கொண்ட முன் இருக்கைகள், 8-இன்ச் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன்பக்க ஆர்ம் ரெஸ்ட், வட்ட வடிவிலான ஏசி துளைகள், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி துளைகள் உள்ளிட்டவற்றுடன் கருப்பு- பழுப்பு என்ற இரு விதமான நிறங்களில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

இவற்றுடன் வயர் இல்லா & யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் துளைகள், டெலெஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மெண்ட் உடன் ஸ்டேரிங் சக்கரம், தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடி, ஸ்மார்ட்போன் பாக்கெட்கள் மற்றும் டிக்கெட் ஹோல்டர் உள்ளிட்டவையும் ஸ்லாவியாவில் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், காரின் பின்புறத்தை காட்டும் கேமிரா, சீட்-பெல்ட் நினைவூட்டும் வசதி, அதிவேகத்தை எச்சரிக்கும் அமைப்பு, டயர்களின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு, டிராக்‌ஷன் கண்ட்ரோல், டிஸ்க் ப்ரேக் துடைப்பான், ஏறுமுகமாக உள்ள சாலைகளில் ஏறுவதற்கான கண்ட்ரோல், விஎஸ்எம், பல விதங்களில் ஏற்படும் மோதலை உணர்ந்து தன்னிச்சையாக செயல்படக்கூடிய ப்ரேக்கிங் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் ஸ்லாவியாவில் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.0 லிட்டர், 3-சிலிண்டர் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் என்ற இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் டிரான்ஸ்மிஷனுக்கு நிலையான 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், கூடுதல் தேர்வாக 1.0 லி என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரும், 1.5 லி என்ஜின் உடன்7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடாவின் புதிய நடுத்தர-அளவு செடான் கார், ஸ்லாவியா!! உலகளவில் வெளியீடு, இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டில்!

பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், ஸ்லாவியாவின் நீளம் 4,541மிமீ, அகலம் 1,752மிமீ, உயரம் 1,487மிமீ ஆகும். இந்த நடுத்தர-அளவு செடான் காரின் வீல்பேஸ் 2,651மிமீ நீளத்தில் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 521 லிட்டர்கள் கொள்ளளவில் உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Slavia Unveiled.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X