நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் வருகிற ஜூன் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு அனைத்து விதங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த புதிய செடான் காரின் வெளிப்புற மற்றும் உட்புற படங்களை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

ஏனெனில் 2021 ஆக்டேவியா அப்டேட்களை உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரு பக்கங்களிலும் பெற்றுவரவுள்ளது. அவற்றை சுட்டிக்காட்டும் விதத்திலேயே தற்போது ஸ்கோடா வெளியிட்டுள்ள படங்கள் அமைந்துள்ளன.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

உட்புறத்தில் 2021 ஆக்டேவியா புதிய முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உடன் 10-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுவருகிறது. இதனுடன் 2-ஸ்போக் டிசைனிலான பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரத்தையும் இந்த செடான் காரில் ஸ்கோடா அறிமுகப்படுத்தவுள்ளது.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

ஸ்டேரிங் சக்கரத்திற்கு உதவியாக பெடல் ஷிஃப்டர்களை பெறவுள்ள 2021 ஆக்டேவியா, ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் புதிய ஷிஃப்ட்-பை-வயர் கியர் தேர்ந்தெடுப்பானையும் ஏற்று வரவுள்ளது. இவற்றுடன் வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜர், காண்டான் ஆடியோ சிஸ்டம் மற்றும் கேபினை சுற்றிலும் விளக்கு அமைப்பையும் இந்த 2021 ஸ்கோடா கார் பெற்று வரவுள்ளது.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

கூடுதல் பாதுகாப்பிற்கு ஆட்டோ-ஹோல்ட் வசதி உடன் இ-பார்க்கிங் ப்ரேக்கை ஏற்கவுள்ள ஆக்டேவியாவின் புதிய தலைமுறை காரில் டேஸ்போர்டு மென்மையான பாகங்களுடன் கூடுதல் ப்ரீமியம் தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதை தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் காணலாம்.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

புதிய ஆக்டேவியாவின் வெளிப்புறத்தில் வழங்கவுள்ள அம்சங்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தது தான். ஸ்கோடா நிறுவனத்தின் அடையாள பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் உடன் காரின் முன்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் வழங்கப்பட உள்ளன.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

காரின் மேற்கூரை முன்பை காட்டிலும் கூபே போன்றதான தோற்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. அதுமட்டுமின்றி மல்டி-ஸ்போக் டிசைனில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் புதிய ஆக்டேவியாவில் பொருத்தப்பட உள்ளன. பின்பக்கத்தில் டைனாமிக் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களுடன் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட உள்ளன.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

பின்பக்கத்தில் தடிமனான ‘SKODA' எழுத்துகள் காருக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் கொடுக்கப்படவுள்ளன. இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள 2021 ஸ்கோடா ஆக்டேவியாவில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது.

நாளுக்கு நாள் ஆவலை அதிகரிக்கும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா!! ஜூன் 10ல் அறிமுகம்

அதிகப்பட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ஸ்கோடா ஆக்டேவியாவிற்கு விற்பனையில் ஹூண்டாய் எலண்ட்ரா இந்தியாவில் போட்டியாக விளங்கி வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2021 Skoda Octavia Interior Exterior Details Revealed Ahead Of Launch.
Story first published: Monday, June 7, 2021, 23:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X