க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் வெளியீடு!

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் வெளியீடு!

ஸ்கோடா நிறுவனம் இந்திய கார் சந்தையில் மிக முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது. அதன்படி, பல புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கான சில பிரத்யேக எஸ்யூவி மாடல்களையும் களமிறக்க உள்ளது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் வெளியீடு!

அந்த வகையில், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவிகளுக்கு நிகரான புதிய எஸ்யூவியை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஸ்கோடா விஷன் ஐஎன் காரின் அடிப்படையிலான தயாரிப்பு மாடலாக இந்த எஸ்யூவி வர இருக்கிறது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் வெளியீடு!

இந்த நிலையில், இந்த எஸ்யூவிக்கு குஷாக் என்று பெயரிட்டுள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். குஷாக் என்றால் சமஸ்கிருத மொழியில் அரசன் என்று பொருள்படுகிறது. இந்த எஸ்யூவி காம்பேக்ட் மற்றும் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் உள்ள முன்னணி மாடல்களை குறிவைத்து நிலைநிறுத்தப்பட உள்ளது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் வெளியீடு!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியானது ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இந்தியாவுக்கான மாற்றங்களுடன் கூடிய ஸ்கோடா எம்க்யூபி ஐஎன் என்ற பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.

க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் வெளியீடு!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஹாலஜன் பனி விளக்குகள், டைமண்ட கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் கியவை கவரும் வகையிலான அம்சங்களாக இருக்கும். இந்த காரில் ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

 க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் வெளியீடு!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

க்ரெட்டாவுக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் பெயர் வெளியீடு!

வரும் மார்ச் மாதம் புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த கார் நிச்சயம் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has named Vision IN Concept as Kushaq for Indian market.
Story first published: Thursday, January 7, 2021, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X