மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

ஜப்பானில் உள்ள நிஸான் தொழிற்சாலையில் மனிதர்களை காட்டிலும் ரோபோட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

தற்காலத்தில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அனைத்தும் தானியங்கி தரத்திற்கு கொண்டுவரப்பட்டு வருகின்றன. ஜப்பானை தலைமையிடமாக கொண்டது நிஸான் என்பது நமக்கு தெரிந்த விஷயம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிஸானின் 'அறிவுசார்ந்த தொழிற்சாலை' உள்ளது.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

இந்த தொழிற்சாலையில் தான் மனிதர்களை காட்டிலும் ரோபோட்கள் அதிகளவில் தயாரிப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அளவில் சிறிய ரோபோட்களான இவை வெல்டிங் பணியிலும், பாகங்களை பொருத்தும் பணியிலும் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

இவ்வளவு ஏன், பெயிண்ட் வேலைகளையும் கூட ரோபோட்களே கவனித்து கொள்கின்றன. இந்த டோக்கியோ தொழிற்சாலையில் எலக்ட்ரிக், இ-பவர் மற்றும் வழக்கமான எரிபொருள் என்ஜினை கொண்ட கார்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை மூன்றும் இந்த தொழிற்சாலையில் ஒரே லைனில் தயாரிக்கப்படுகின்றன.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

இவை ஒவ்வொன்றும் ஓவ்வொரு விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளை பெற்றுள்ளன. ரோபோக்கள் இந்த பணிகளை செய்யும்போது, வழக்கமான தொழிலாளர்கள் ரோபோக்களால் சேகரிக்கப்பட்ட தலை பகுப்பாய்வு ஆராய்வது அல்லது தொழிற்சாலை உபகரணங்களை பராமரிப்பது போன்ற திறமையான வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

இதுகுறித்து நிஸான் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் ஹிடேயுகி சகமோடோ பேசுகையில், இப்போது வரையில், மக்கள் அனுபவத்தின் மூலம் உற்பத்தி மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் இந்த வேலையை செய்கின்றன. தொழிற்நுட்பங்க்ள் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

சந்தையை பொறுத்து வாகனங்களை விரைவாக தயாரித்து கொடுக்கக்கூடிய ரோபோட்டிக் தொழிற்நுட்பங்களை கண்டறியும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றோம். பணியாளர்கள் போதாமையால், அதிலும் குறிப்பாக தற்போதைய கொரோனா வைரஸ் சூழலால் ஏற்பட்டுள்ள பணியாளர்கள் பற்றாக்குறையால் இவ்வாறான முடிவில் இறங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்த தொழிற்சாலை மட்டுமின்றி, மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கும் இந்த ரோபோட்டிக் தொழிற்நுட்பத்தை கொண்டு செல்ல நிஸான் தயாராகி வருகிறது, குறிப்பாக, கூட்டணி நிறுவனமான பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட்டின் தொழிற்சாலைகளில் ரோபோக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நிஸான் முனைப்புடன் உள்ளது.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

கொரோனா வைரஸ் பரவலினால் குறைக்கடத்திகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலிலும் இலாபகரமான வணிகத்திற்கு இந்த நிதியாண்டிற்குள் வருவோம் என நிஸான் நம்பிக்கையாக உள்ளது. நிஸான் நிறுவனத்தின் முக்கிய சேர்மனான கார்லோஸ் கோஸ்ன் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

இந்த ஊழலில் இருந்து மீண்டு ஜப்பான் சந்தையில் விரைவாக நிஸான் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. இந்திய சந்தையில் அதிகளவில் நிஸான் கார்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றாலும், உலகளவில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பல விதமான நடவடிக்கைகளில் நிஸான் ஈடுப்பட்டு வருகிறது.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

இதில் ஒன்று தான் விரைவில் நடைபெறவுள்ள ஐசிசி 2021 ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான ஸ்பான்சராக நிஸான் மேக்னைட் தேர்வு செய்யப்பட்டிருப்பது. சிக்ஸர் மழை பொழியவுள்ள 2021ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டில் வருகிற அக்டோபர் 17ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளது.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

இந்த தொடரில் அக்டோபர் 17ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி வரையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி கார் மைதானத்தில் நிறுத்தப்பட உள்ளது. ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடன் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2016இல் இருந்து கூட்டணியில் இருந்து வருகிறது.

மனிதர்கள் குறைவு, ரோபோட்கள் தான் அதிகம்!! ஜப்பானில் உள்ள நிஸானின் தொழிற்சாலை!

இதற்கு பிராண்ட் அம்பாஸிடராக முன்னள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வை நிஸான் நிறுவனம் அமர்த்தியுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் 2021 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின்போது குறிப்பாக மேக்னைட் நிலைநிறுத்தப்படுவதற்கு காரணம், அறிமுகத்திற்கு பிறகு இந்திய சந்தையில் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஓர் கவனிக்கத்தக்க இடத்தை இந்த எஸ்யூவி கார் பெற்று கொடுத்துள்ளது. அதேநேரம் நேபாளம், இந்தோனிஷியா மற்றும் தென் ஆப்ரிக்கா மற்ற வெளிநாட்டு சந்தைகளிலும் நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Small robots replace mojority human workers at Nissan's Tokyo factory.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X