ரூ.11 லட்சம்! புதிய Sonalika Tiger DI75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா, அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல!

சோனாலிகா நிறுவனம் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் புதுமுக டிராக்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதனை அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட டிராக்டராக நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. வாருங்கள் இதுகுறித்த முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

சோனாலிகா (Sonalika) நிறுவனத்தின் புதிய டிராக்டர் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. டைகர் டிஐ 75 ஏடபிள்யூடி (Tiger DI 75 AWD) எனும் புதுமுக டிராக்டரே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 11 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

இவ்ளோ அதிக விலையில் டிராக்டரா என வாயை பிளக்க வேண்டாம். இந்த டிராக்டரில் பன்முக சிறப்பு வசதிகளை சோனாலிகா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதன் விளைவாகவே வழக்கமான டிராக்டரைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக புதிய டைகர் டிஐ 75 ஏடபிள்யூடி டிராக்டர் காட்சியளிக்கின்றது. இதுவே டிராக்டர் அதிக விலையில் விற்பனைக்கு வர காரணமாக அமைந்திருக்கின்றது.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

'விவசாயிகள் தினம்' (Kisan Diwas) நினைவாக இந்த டிராக்டர் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிராக்டரில் சிஆர்டி தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரெம் 4 (Trem IV) உமிழ்வு விதிமுறைகளுக்கு உட்பட்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது ஓர் 4 வீல்கள் இயக்கம் கொண்ட டிாரக்டரும்கூட.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

சோனாலிகா நிறுவனம் டைகர் டிஐ 75 ஏடபிள்யூடி மட்டுமின்றி இதன் உடன் டைகர் டிஐ 65 (Tiger DI 65 4WD) நான்கு வீல் இயக்கம் கொண்ட மற்றுமொரு தேர்வையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கே ரூ. 11 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

டைகர் டிஐ 75 ஏடபிள்யூடி தேர்விற்கு ரூ. 11.2 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிராக்டர்களில் சிறப்பு வசதியாக ஓர் பொத்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொத்தானை தட்டினால் எஞ்ஜின்கள் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். டைகர் டிஐ 75 மாடல் அதிகபட்சமாக 75 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

இதன் டைகர் டிஐ 65 தேர்வு அதிகபட்சமாக 65 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இத்துடன் 65 எச்பி மற்றும் 55 எச்பி பவர்களை வெளிப்படுத்தும் சிறப்பு கஸ்டமைசேஷன்களும் இந்த டிராக்டர்களில் சோனாலிகா வழங்குகின்றது.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

எஞ்ஜின் விபரம்:

4,712 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிஆர்டி எஞ்ஜினே இந்த டிராக்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் டைகர் டிஐ 75 ஏடபிள்யூடி மாடலில் அதிகபட்சமாக 290 என்எம் டார்க்கையும், டைகர் டிஐ 65 வேரியண்டில் 258 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

தொழில்நுட்ப விபரம்:

தொடர்ந்து, இரு தேர்வுகளிலும் 'ஸ்கை ஸ்மார்ட்' (Sky Smart) தொழில்நுட்ப அம்சமும் இந்த டிராக்டர்களில் வழங்கப்பட்டிருக்கின்றது. எஞ்ஜின் இம்மொபிலைஸர், ரியல் நேர பிரேக் டவுண் உதவிகள், ஜியோ ஃபென்ஸிங் மற்றும் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகளை ஸ்கை ஸ்மார்ட் தொழில்நுட்பம் வழங்கும்.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

இதுமாதிரியான பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த டிராக்டருக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் உயர் ரக கார்களில் மட்டுமே தென்படக் கூடிய சிறப்பு வசதிகளை எல்லாம் சோனாலிகா நிறுவனம் புதிய டைகர் டிஐ 75 டைகர் டிஐ 65 கார்களில் வழங்கியிருக்கின்றது.

ரூ. 11 லட்சமாம்... புதிய Sonalika Tiger DI 75 டிராக்டர் அறிமுகம்... இவ்ளோ விலையா! அப்படி என்னங்க வசதி இருக்கு இதுல?

விவசாய வாகனங்களும் தொழில்நுட்ப வசதிகளை பெற தகுதியானவை என்பவை தெரியப்படுத்தும் வகையில் இந்த வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் வாயிலாக விவசாயிகள் எண்ணற்ற சிறப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தெளிவாகக் கூற வேண்டுமானால் டிராக்டரில் இடம் பெற்றிருக்கும் தொழில்நுட்பம் வாகனம் பற்றிய பல்வேறு தகவல்களை அவர்கள் விரல் நுனியில் அறிந்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

குறிப்பு: கடைசி மூன்று படங்கள் உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Sonalika tiger di 75 and di 65 tractor launched in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X