கார்களுக்கான புதிய சப் ஊஃபரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சோனி!

காரின் பூட் ரூம் பகுதியில் இடத்தை அடைக்காமல் அடக்கமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் சோனி நிறுவனத்தின் புதிய கார் சப் ஊஃபர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்தின் திறன், விலை உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களுக்கான புதிய சப் ஊஃபரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சோனி!

கார்களின் அந்தஸ்தை கூட்டும் விஷயங்களில் மியூசிக் சிஸ்டமும் முக்கிய விஷயமாக இருக்கிறது. ஒலி தரம் மிகச் சிறப்பாக இருப்பதற்காக கார் உரிமையாளர்கள் உயர்தர ஸ்பீக்கர், சப் ஊஃபர், ஆம்பிளிஃபயர் போன்ற சாதனங்களை வாங்கி பொருத்திக் கொள்கின்றனர்.

இதில் சப் ஊஃபர் என்பதும் மிக முக்கிய விஷயமாக இருக்கிறது. ஸ்பீக்கர் சிஸ்டத்துன் பேஸ் ஒலி அளவை கூட்டுவதில் சப் ஊஃபர் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் இது காரில் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் நிலை உள்ளது.

கார்களுக்கான புதிய சப் ஊஃபரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சோனி!

இதனை மனதில் வைத்து கார்களுக்காக மிகவும் அடக்கமான வகை சப் ஊஃபரை சோனி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.சோனி XS-AW8 என்ற பெயரில் இந்த புதிய சப் ஊஃபர் வந்துள்ளது. இதனை பொருத்துவதும், ஏற்கனவே உள்ள கார் ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் இணைத்துக் கொள்வதும் மிக எளிதானதாக சோனி தெரிவித்துள்ளது.

கார்களுக்கான புதிய சப் ஊஃபரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சோனி!

இந்த சப் ஊஃபர் சாதனமானது 160 வாட் ஒலி அளவை வழங்கும். மேலும், அதிர்வுகள் மற்றும் இதர சப்தங்கள் இல்லாத மிகச் சிறப்பான ஒலி தரத்தை இந்த சப் ஊஃபர் வழங்கும். இதில் இன்பில்ட் ஆம்பிளிஃபயர் உள்ளதுடன், இது வெப்பத்தை தாங்கும் வல்லமை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கான புதிய சப் ஊஃபரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சோனி!

இந்த புதிய சப் ஊஃபரில் வலிமையான டஃயப்ரம் எனப்படும் சவ்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் சிறப்பான ஒலி தரத்தை வெளிக்கொணர உதவுகிறது. இதன் கட்டுப்படுத்துவதற்கான டயலை ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் பொருத்திக் கொள்வதற்கு ஏதுவாக வயருடன் வருகிறது.

கார்களுக்கான புதிய சப் ஊஃபரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது சோனி!

சோனி XS-AW8 சப் ஊஃபருக்கு ரூ.19,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1 முதல் சோனி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்கள், கார் ஆடியோ சாதன கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கார் டீலர்களில் இந்த சப் ஊஃபர் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles

English summary
Sony has introduced compact 'XS-AW8' subwoofer for cars in India.
Story first published: Thursday, January 28, 2021, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X