தென் ஆப்பிரிக்கர்களுக்கும் பாதுகாப்பான பயணம்... இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்...

தென் ஆப்பிரிக்கர்களுக்கான மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் பாதுகாப்புகுறித்து மேற்கொள்ளப்பட்ட மோதல் பரிசோதனையில் 5ற்கு ஐந்து என்ற பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தென் ஆப்பிரிக்கர்களுக்கும் பாதுகாப்பான பயணம்... இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்...

மஹிந்திரா நிறுவனம் அதன் தயாரிப்புகளை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா நாட்டிலும் மஹிந்திரா நிறுவனம் அதன் புகழ்பெற்ற சில தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

தென் ஆப்பிரிக்கர்களுக்கும் பாதுகாப்பான பயணம்... இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்...

அவ்வாறு அது விற்பனைச் செய்து வரும் கார் மாடல்களில் எக்ஸ்யூ300 எஸ்யூவியும் ஒன்று. இந்த காரை மிக மிக சமீபத்தில் குளோபல் என்சிஏபி அமைப்பு மோதல் வினைக்கு உட்படுத்தியது. இந்த கிராஷ் டெஸ்ட் பரிசோதனையில் ஆப்பிரிக்காவிற்கான மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் மிக மிக பாதுகாப்பான கார் என்ற வெற்றி வாகையைச் சூடியிருக்கின்றது.

தென் ஆப்பிரிக்கர்களுக்கும் பாதுகாப்பான பயணம்... இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்...

அதாவது, பாதுகாப்பு தரத்தில் ஐந்திற்கு 5 நட்சத்திரங்கள் என்ற ரேட்டிங்கை இக்கார் பெற்றிருக்கின்றது. ஆப்பிரிக்கர்களுக்கான ஓர் இதுமாதிரியான அதிக மதிப்பெண்ணை இதுவே முதல் முறை என கூறப்படுகின்றது. ஆகையால், மஹிந்திரா நிறுவனத்தின் இந்த தயாரிப்பு இந்தியர்களுக்கு பெறுமையைத் தேடி வரும் வகையில் நற் மதிப்பெண்ணைப் பெற்றிருக்கின்றது.

தென் ஆப்பிரிக்கர்களுக்கும் பாதுகாப்பான பயணம்... இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்...

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும் இதே பாதுகாப்பு திறன் கொண்ட வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது மோதல் பரிசோதனையைச் சந்தித்த ஆப்பிரிக்கா எக்ஸ்யூவி 300 கார் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

தென் ஆப்பிரிக்கர்களுக்கும் பாதுகாப்பான பயணம்... இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்...

குறிப்பாக, விபத்து அசம்பாவிதங்களின்போது அதிக ஆபத்தைச் சந்திக்கும் உடல் பாகங்களான கழுத்து, தலை மற்றும் கால் ஆகிய பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வாகனமாக இது இருக்கின்றது. மேலும், இதன் உடல் கட்டுமானமும் மிக உறுதியானது என்பதை இந்த கடுமையான மோதல் பரிசோதனையில் நிரூபித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கர்களுக்கும் பாதுகாப்பான பயணம்... இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்...

எனவேதான் இக்காரினை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்திய குழுவினர் ஐந்திற்கு 5 என்ற ரேட்டிங்கினை வழங்கியிருக்கின்றனர். மேலும், இந்திய தயாரிப்பைக் கண்டு வியப்பிற்கும் ஆளாகியிருக்கின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் ஓர் இந்திய தயாரிப்பு மட்டுமல்ல இந்திய டிசைன் தாத்பரியங்களுடன் உருவாகிய வாகனமும்கூட.

தென் ஆப்பிரிக்கர்களுக்கும் பாதுகாப்பான பயணம்... இந்தியாவிற்கு பெறுமை தேடி தந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்...

இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இக்கார், 1.2 லிட்டர் 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னர் ஆகிய எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 110 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இதேபோன்று, ஆயில் பர்னர் எஞ்ஜின் 116.6 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இக்காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றது. பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர்பேக், ரியர் பார்க்கிங் கேமிரா, முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், இஎஸ்பி, கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
South Africa’s Mahindra XUV300 Gets 5-Star Safety Rating At NCAP Crash Test. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X