இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

கார் சமூகங்கள் மிக பெரியது. அவற்றை எந்தவொரு காலக்கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வகையின்கீழ் மட்டுமாக வகைப்படுத்த முடிந்ததில்லை. பட்ஜெட் போட்டு வாங்குபவர்களில் இருந்து விலையை பற்றி சிறிதும் கண்டு கொள்ளாமல் லக்சரி தரத்தில் வாங்குபவர்களுக்கு வரையிலான கார்கள் நமது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, முந்தைய காலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

இவர்கள் எல்லாம் ஒரு தனி ரகம். இவர்கள் இல்லாமல் ஆஃப்-ரோடு பயணங்களுக்காக தனது காரை கஸ்டமைஸ்ட் செய்து பெறுவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் வேறொரு ரகம். எல்லா கார்களையும் கஸ்டமைஸ்ட் செய்துதான் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ப மாற்றி கொள்ள வேண்டும் என்றில்லை.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

ஏனெனில் சில கார்களில் தயாரிப்பு நிறுவனமே தொழிற்சாலையில் 4x4 சிஸ்டத்தை வழங்குகிறது. இந்த வகையில் 4x4 ட்ரைவ்ட்ரெயின் உடன் இதற்கு முன் விற்பனை செய்யப்பட்ட அல்லது தற்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற சில பிரபலமான கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

மஹிந்திரா ஸ்கார்பியோ

‘எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்' என்ற அணுகுமுறையை கொண்ட மஹிந்திரா வாகனம் ஸ்கார்பியோ ஆகும். ஸ்கார்பியோவில் 4x4 ட்ரைவ்ட்ரெயின் தேர்வு வழங்கப்படுகிறதா என ஆச்சிரியமாக கேட்க வேண்டாம். ஏனென்றால் இத்தகைய ட்ரைவிங் தேர்வு சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஸ்கார்பியோவில் வழங்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

அதன்பின் ஸ்கார்பியோ பின்சக்கர ட்ரைவிங்கை மட்டுமே கொண்ட மாடலாக மாற்றப்பட்டது. 4x4 ஸ்கார்பியோ மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. இந்த என்ஜின் ஆற்றல், சிறந்த ஆஃப்-ரோடு பண்பிற்காக குறைந்த ஆர்பிஎம்-இல் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

மாருதி சுஸுகி ஜிப்ஸி

மாருதி ஜிப்ஸி என்றதுமே நமக்கு இந்திய இராணுவமும், ராலி ரேசிங்கும் தான் நினைவிற்கு வருகின்றன. இவ்வாறான தனி பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டுவந்த ஜிப்ஸி, அதேநேரம் பொது பயன்பாட்டிற்காகவும் அதிகளவில் தயாரிக்கப்பட்டது. இதனால், இந்த மாருதி வாகனத்தை பன்முகத்தன்மை கொண்ட வாகனம் என அழைப்பர்.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

குறை விகிதத்தில் 4x4 கியர்பாக்ஸ் மற்றும் குறைந்த அளவிலான சக்கரங்களுக்கு இடையேயான தூரம் உள்ளிட்டவை எந்தவொரு பாதையிலும் கொண்டு செல்ல ஜிப்ஸியை ஏற்றதாக மாற்றின. இருப்பினும் சில காரணங்களினால் ஜிப்ஸியை தொடர்ந்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை மாருதி நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

ஸ்கோடா யெட்டி

இந்தியாவில் முதன்முதலாக காம்பெக்ட் எஸ்யூவி பிரிவை ஆரம்பித்து வைத்த மாடல்களுள் ஸ்கோடா யெட்டியும் ஒன்றாகும். செயல்படுதிறனில் இந்த ஸ்கோடா காம்பெக்ட் எஸ்யூவி வாகனத்திற்கு நிகர் அது மட்டுமே ஆகும். இருப்பினும் இதனை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில் ஸ்கோடா தோற்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

ஏனெனில் சில வருடங்களிலேயே ஸ்கோடா யெட்டியின் விற்பனை நம் நாட்டில் நிறுத்தி கொள்ளப்பட்டது. ஆற்றல்மிக்க என்ஜின் மற்றும் தடையில்லா டிரான்ஸ்மிஷனை பெற்றுவந்த யெட்டி காம்பெக்ட் எஸ்யூவியில் 4x4 ட்ரைவ்ட்ரெயின் தேர்வும் வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

ரெனால்ட் டஸ்டர்

மலிவான விலையில் 4x4 சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்பட்ட கார்களின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தோமேயானால், அதில் ரெனால்ட் டஸ்டரின் பெயர் தான் முன்னிலையில் இருக்கும். டஸ்டரின் அனைத்து-சக்கர தேர்வில் காரின் பின்பக்கத்தில் பல பிணைப்பு சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

அதிகப்பட்சமாக 110 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் உடன் வழங்கப்பட்டதால், ரெனால்ட்டின் இந்த எஸ்யூவி மாடலின் பயண அனுபவத்திலும் பெரிய அளவில் எந்த குறையும் இல்லை. விரைவில் மீண்டும் டஸ்டரில் 4x4 ட்ரைவ்ட்ரெயின் தேர்வை ரெனால்ட் நிறுவனம் கொண்டுவரும் என நம்புவோம்.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக அப்டேட் செய்யப்பட்ட இந்த ஜப்பானிய பிக்அப்-ட்ரக் வாகனம் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பின் மீண்டும் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த 4x4 எஸ்யூவி கார்கள்!! சத்தமே இல்லாமல் நடையை கட்டியவை

ஆஃப்-ரோடு பயணங்களுக்காக பிக்அப்-ட்ரக் ஒன்றை எடுப்பவர்களின் முக்கிய தேர்வாக இசுஸு டி-மேக்ஸ் உலகளவில் விளங்கி வருகிறது. பொதுவாக 4x4 வாகனங்களில் லிஃப்ட் கிட் மற்றும் அப்கிரேட்டான சஸ்பென்ஷனை வாடிக்கையாளர்கள் புதியதாக பொருத்துவர். ஆனால் இவை அனைத்தும் இந்த இசுஸு வாகனத்தில் ஸ்டாண்டர்ட் வசதிகளாவே வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
SUVs That Used To Offer 4X4 In The Past.
Story first published: Thursday, August 12, 2021, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X