இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

நமது இந்தியாவில் எஸ்யூவி கார்கள் விற்பனை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இருப்பினும் சில பிராண்டின் எஸ்யூவி கார்கள் வாடிக்கையாளர்களை கவர தவறியதால் மிக பெரிய தோல்வியினை சந்தித்துள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

மஹிந்திரா நுவோஸ்போர்ட்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திராவில் இருந்து துவக்கத்தில் வெளிவந்த எஸ்யூவி மாடல் தான் நுவோஸ்போர்ட் ஆகும். சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டன.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அதிகப்பட்சமாக 100 எச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கிய இதன் டீசல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டன.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

ரெனால்ட் கேப்ச்சர்

கேப்ச்சர், ஸ்டைலிஷான மற்றும் மாடர்ன் தோற்றம் கொண்ட எஸ்யூவி வாகனமாக களமிறக்கப்பட்டது. இருப்பினும் விற்பனை எண்ணிக்கை பெரிய அளவில் குறைய, கேப்ச்சர் கார்களின் விற்பனையை கடந்த 2020ஆம் ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் நிறுத்தியது.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

இந்த எஸ்யூவி வாகனத்தில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 104 எச்பி-ஐயும், டீசல் என்ஜின் 108 எச்பி-ஐயும் வெளிப்படுத்தக்கூடியதாக விளங்கியது.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

செவ்ரோலெட் ட்ரைல்ப்ளாஸெர்

இந்திய சந்தையில் கார்களை விற்பனை செய்து கொண்டிருந்த சமயத்தில் செவ்ரோலெட் நிறுவனம் அறிமுகப்படுத்திய முழு-அளவு எஸ்யூவி வாகனம் தான் ட்ரைல்ப்ளாஸெர் ஆகும். அளவில் பெரிய 2.8 லிட்டர் டீசல் என்ஜின் உடன் இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 198 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. செவ்ரோலெட் கார்கள் எதுவும் பெரியளவில் இந்தியாவில் விற்பனையாகவில்லை. அதிலும் குறிப்பாக ட்ரைல்ப்ளாஸெர் வெறும் 2 வருடங்கள் மட்டுமே நம் நாட்டில் விற்பனையில் இருந்தது.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

நிஸான் டெரானோ

தற்போதும் விற்பனையில் இருக்கும் ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி மாடலின் சகோதர-வெர்சன் தான் நிஸான் டெரானோ ஆகும். இதனால் படத்தில் டெரானோ காரை பார்த்தால், உங்களுக்கு டஸ்டர் கார்களின் ஞாபகம் வருவதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

ஆனால் ரெனால்ட் டஸ்டரை காட்டிலும் இந்த ஜப்பானிய எஸ்யூவி வாகனம் நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக விளங்கியது. புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளின் காரணமாக டெரானோவின் விற்பனையை கடந்த 2020ஆம் ஆண்டில் நிஸான் நிறுவனம் நிறுத்தியது.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

ஃபோர்ஸ் ஒன்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமாகிய எஸ்யூவி மாடல் ஃபோர்ஸ் ஒன். இருப்பினும், மஹாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்ட இந்த எஸ்யூவி வாகனம் அதன்பின் வாடிக்கையாளர்களை கவர்வதில் பெரியதாக கோட்டைவிட்டது. இதனால் இதன் விற்பனையையும் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி காரில் அதிகப்பட்சமாக 139 எச்பி மற்றும் 321 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டது. இந்த ஃபோர்ஸ் எஸ்யூவி வாகனத்தின் அதே ப்ளாட்ஃபாரத்தில் தான் பழைய தலைமுறை ஃபோர்டு எண்டேவியர் உருவாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

மஹிந்திரா குவாண்டோ

மஹிந்திரா பிராண்டில் இருந்து குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற கார் மாடல்கள் ஏகப்பட்டவை இதற்குமுன் வெளிவந்துள்ளன. அவற்றில் குவாண்டோவும் ஒன்றாகும். அளவில் சற்று சிறியதாக ஐந்து பேர் அமர்ந்து செல்வதற்கு ஏற்ற எஸ்யூவி காராக இதை மஹிந்திரா வடிவமைத்து இருந்தது.

இந்தியர்களை கவர்வதில் கோட்டைவிட்ட எஸ்யூவி கார்கள் இவைதான் - மஹிந்திரா பிராண்டில் மட்டும் இத்தனையா!!

இருப்பினும் இந்த மஹிந்திரா வாகனம் இந்திய வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதே உண்மை. இதில் பொருத்தப்பட்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 எச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

Most Read Articles
மேலும்... #எஸ்யூவி #suv
English summary
6 SUVs That Severely Failed In The Indian Market.
Story first published: Sunday, September 12, 2021, 23:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X