வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

ஜப்பானை சேர்ந்த சுஸுகி பிராண்டில் இருந்து உலகளவில் பெரும்பான்மையான நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக இக்னிஸ் உள்ளது. நம் நாட்டில் இந்த அளவில் சிறிய காருக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும், மற்ற வெளிநாட்டு சந்தைகளில் கணிசமான எண்ணிக்கையில் இந்த மாடலுக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர்.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

இந்த வகையில் ஐரோப்பாவிலும் இவ்வாறான மைக்ரோ-கார்களுக்கு நன்றாகவே மார்க்கெட் உள்ளது. இதனால் தான் தற்போது சுஸுகி நிறுவனம் இக்னிஸின் சிவப்பு & வெள்ளை எடிசன் கார்களை ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான ஸ்பெயினில் அறிமுகப்படுத்தி உள்ளது.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

பெயருக்கு ஏற்ப வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் இக்னிஸ் கார்கள் வெறும் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளை நிறத்தை கொண்ட பதிப்பில் சிவப்பு நிறமும் மிகவும் குறைவாக, பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், முன்பக்க க்ரில் மற்றும் C-பில்லரில் என ஆங்காங்கே காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளது.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

அதேபோல் சிவப்பு நிற பதிப்பில் இதே பாகங்களில் வெள்ளை நிறத்தை பார்க்க முடிகிறது. இந்த கலர் கலவையினால் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்யப்படும் மற்ற இக்னிஸ் கார்களை காட்டிலும் ஸ்பெயின் நாட்டிற்கான இந்த ஸ்பெஷல் எடிசன்கள் ஸ்போர்டியானதாக காட்சியளிக்கின்றன.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

அதிலும் குறிப்பாக இக்னிஸின் புதிய சிவப்பு நிற எடிசனில் முன்பக்க க்ரில்லின் மேற்பகுதியில் வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிற தொடுதல் நமக்கு விலைமிக்க ஜீப் காம்பஸ் காரை ஞாபகப்படுத்துகிறது. இவற்றின் வெளிப்புற பெயிண்ட் தீம் அப்படியே உட்புறத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

வெள்ளை ஸ்பெஷல் எடிசனின் உட்புறத்தில் மைய கன்சோலின் கீழ்பகுதி, ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் ஏசி துளைகளில் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதே ஃபார்முலா தான் சிவப்பு ஸ்பெஷல் எடிசனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன்களின் ஸ்டேரிங் சக்கரமானது பல-செயல்பாட்டு கண்ட்ரோல்கள், ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி இணைப்பு உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

சுஸுகி இக்னிஸின் இந்த ஸ்பெஷல் எடிசன்களில் 16-இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் ட்யுல்ஜெட் என்ஜின் அதிகப்பட்சமாக 83 எச்பி மற்றும் 107 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அத்துடன், அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டமும் இவற்றில் வழங்கப்பட்டுள்ளன.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், கணிக்கக்கூடிய ப்ரேக்கிங் கண்ட்ரோல் உடன் இரட்டை கேமிரா ப்ரேக் உதவி, பயணத்தை துவங்கும்முன் காரில் ஏதேனும் குறை உள்ளதா என்பதை தெரிவிக்கும் தொழிற்நுட்பம் உள்பட முன், பக்கவாட்டு என இரு இருக்கை அமைப்பிலும் காற்றுப்பைகளை இந்த லிமிடெட் இக்னிஸ் கார்கள் பெற்றுள்ளன.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் இக்னிஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதைய இக்னிஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.02 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. அதிகப்பட்சமாக 1.3 லிட்டர் ஆட்டோமேட்டிக் & இரட்டை நிறத்தில் வழங்கப்படும் இதன் ஆல்பா வேரியண்ட்டின் விலை ரூ.7.53 லட்சமாக உள்ளது.

வேற லெவல் தோற்றத்தில் சுஸுகி இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம்!! நம் இந்தியாவில் இல்லைங்க, ஸ்பெயினில்

இந்திய சந்தையில் இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் பிஎஸ்6 இணக்கமான 1.2 லிட்டர் 4-சிலிண்ட்ர் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படலாம். இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Limited edition Suzuki Ignis in Red and White is sportier than existing model.
Story first published: Wednesday, October 13, 2021, 23:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X