ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

சுஸுகி வேகன் ஆர் கார் ஒன்று லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் சமீப காலமாக எஸ்யூவி கார்கள் மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படி எஸ்யூவி கார்கள் எவ்வளவுதான் பிரபலமானாலும், ஹேட்ச்பேக் கார்கள் இன்னமும் சிறப்பாக விற்பனையாகி கொண்டுதான் உள்ளன.

ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நடுத்தர வர்க்க மக்களின் தேவைகள் அனைத்தையும் ஹேட்ச்பேக் கார்கள் பூர்த்தி செய்கின்றன. இந்திய சந்தையை பொறுத்தவரையில், ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன் ஆர் திகழ்ந்து வருகிறது.

ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

அறிமுகம் செய்யப்பட்டு நீண்ட காலம் கடந்து விட்டபோதிலும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை தற்போதும் மிக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் வேகன் ஆர் ஹேட்ச்பேக் கார் ஒன்று தற்போது லிமோசின் காராக அவதாரம் எடுத்துள்ளது. ஆம், வேகன் ஆர் காரை, லிமோசின் போல மாடிஃபிகேஷன் செய்துள்ளனர்.

ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

நாம் இங்கே பேசி கொண்டிருக்கும் வேகன் ஆர் கார் பாகிஸ்தானின் லாகூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வேகன் ஆர் காரை சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தோனேஷியாவில் இருந்து பாகங்களை இறக்குமதி செய்து பாகிஸ்தானில் அசெம்பிள் செய்யப்பட்டு அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

பாகிஸ்தானில் சுஸுகி வேகன் ஆர் காரை 6 கேப்டன் இருக்கைகள் உடன் 7 டோர் லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். என்னென்ன மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளது? இதை செய்தது யார்? என்பது போன்ற சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த கார் மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றுள்ளது.

ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், மத்திய வரிசையில் இரண்டு பின்னோக்கிய கேப்டன் இருக்கைகளும், கடைசி வரிசையில் இரண்டு முன்னோக்கிய கேப்டன் இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தனித்தனியான 6 டோர்களையும் இந்த கார் பெற்றுள்ளது. எனவே காரில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் ஏறி, இறங்குவது மிகவும் எளிதாக இருக்கும்.

ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் இன்ஜினில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இந்த வேகன் ஆர் கார் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. பாக்வீல்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி பார்த்தால், இதற்கு 26 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் விலையாக கோரப்பட்டுள்ளது (இந்திய மதிப்பில் தோராயமாக 12 லட்ச ரூபாய்).

ஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. நீண்ட காலமாக இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த முதல் எலெக்ட்ரிக் கார், நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Suzuki Wagon R Hatchback Modified Into Limousine - Details. Read in Tamil
Story first published: Monday, January 4, 2021, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X