இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்! உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

உலகின் அதி வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர் கருவியை ஓர் நிறுவனம் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சார்ஜர் எவ்வளவு விரைவாக மின் வாகனத்தைச் சார்ஜ் செய்யும் என்பது போன்ற முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

எலெக்ட்ரிக் காரை அதிக வேகத்தில் சார்ஜரை ஏபிபி (ABB) நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இது, உலகின் அதிக வேக மின் வாகன சார்ஜர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி என்ன வேகத்தில் இது சார்ஜ் செய்யும் என்பது போன்ற முக்கிய தகவல்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

உலகளவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் உலக நாடுகள் பல மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

அந்தவகையில், இந்தியாவிலும் மானியம் மற்றும் வரி சலுகை ஆகியவற்றின் வாயிலாக மின் வாகன ஊக்குவிப்பு மிக அமோகமாக செய்யப்பட்டு வருகின்றது. ஃபேம்2 திட்டத்தின் வாயிலாக ஒன்றிய அரசு மின் வாகன ஊக்குவிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

இருப்பினும், மக்கள் பலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மின் வாகனங்களின் அதிகமானதாக தென்பட்டாலும், அதனை களையெடுக்கும் விதமாக அரசு மானியம் வழங்கி வருகின்றது. ஆகையால், மின் வாகனங்களின் விலையைக் காட்டில் ஓர் மிக பெரிய தடை கல்லாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைக்கு அடிப்படை வசதி இல்லாதது இருக்கின்றது.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

ஆம், மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்னும் பல முக்கிய நகரங்களிலேயே போதிய அளவில் இல்லாத நிலை தென்படுகின்றது. ஆகையால், எலெக்ட்ரிக் வாகனங்களை எங்கு சார்ஜ் செய்வது என்ற கேள்வி குறி மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இதன் விளைவாக மக்கள் மின் வாகன பயன்பாட்டிற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

அதேவேலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய பல மணி நேரங்களைச் செலவிடும் என்ற நிலை நிலவுகின்றது. 3 மணி நேரம் தொடங்கி 9 மணி நேரம் வரை ஓர் எலெக்ட்ரிக் வாகனத்தைச் சார்ஜ் செய்ய செலவிட வேண்டி இருக்கின்றது. இதுபோன்ற மிக அதிகமான நேரம் காத்திருப்பதை பலர் விரும்பவில்லை என்றே கூறலாம். இதன் விளைவாகவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தற்போதும் குழந்தை பருவத்தில் காட்சியளிக்கின்றது.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

இதனைக் கருத்தில் பிரபல நிறுவனம் ஒன்று அதி விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களைச் சார்ஜ் செய்யும் கருவியை உருவாக்கியிருக்கின்றது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஏபிபி (ABB) பொறியியல் நிறுவனம் ஒன்றே இந்த கருவியை உருவாக்கியிருக்கின்றது. இந்த கருவியை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கின்றது.

ஏபிபி நிறுவனம் புதிதாக டெர்ரா 360 மாடுலர் ( Terra 360 modular) சார்ஜரையே தற்போது வடிவமைத்து இருக்கின்றது. எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜர் ஆகும். இதைக் கொண்டு எந்தவிதமான மின்சார காராக இருந்தாலும் வெறும் 15 நிமிடங்களிலேயே சார்ஜ் செய்து கொள்ள முடியும் என நிறுவனம் சவால் விட்டுள்ளது.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

இது வழக்கமான சார்ஜர் மையங்களைக் காட்டிலும் மிக அதி வேகம் ஆகும். ஆகையால், உலகின் அதிவேக சார்ஜிங் கருவியாக இது உருவெடுத்துள்ளது. இந்த கருவியின் வாயிலாக வெறும் 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் குறைந்தது 100 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய அளவிற்கு சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

இத்தகைய அதி சிறப்பு வாய்ந்த மின்சார வாகன சார்ஜிங் கருவியை ஏபிபி நிறுவனம் முதலில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

இதைத்தொடர்ந்து, 2022ம் ஆண்டில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில் இந்த சார்ஜரை பயன்பாட்டிற்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. நிறுவனம் 2010ம் ஆண்டிலேயே சந்தைக்கு அறிமுகமானது. இதற்குள்ளாக 88 சந்தைகளில் தனது வர்த்தக பணியை மேற்கொண்டு வருகின்றது.

இதோ வந்தாச்சுல... சும்ம டக்குனு சார்ஜாகிடும்... உலகின் அதிக வேக எலெக்ட்ரிக் கார் சார்ஜர்! சில நிமிஷங்களே போதும்!

மேலும், இதுவரை சுமார் 4,60,000 ஆயிரம் மின்வாகன சார்ஜிங் கருவிகளை நிறுவனம் விற்பனைச் செய்திருக்கின்றது. இது தற்போது உருவாக்கி இருக்கும் அதி-வேக சார்ஜிங் கருவியைக் கொண்டு ஒரே நேரத்தில் நான்கு மின்சார கார்களைச் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Swiss engineering company abb launches world s fastest e car charger
Story first published: Thursday, September 30, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X