பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு!

பவர்ஃபுல் எஞ்சின் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் மாடல் இன்று வெளியிடப்பட்டது. பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள இந்த காரின் முக்கிய அம்சங்கள், எஞ்சின் விபரம் மற்றும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி ஆகிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த சந்தையில் மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ போன்ற பல சிறந்த தேர்வுகள் உள்ளன. இருப்பினும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சரியான விலையில் பூர்த்தி செய்யும் பாதுகாப்பான பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடலாக டாடா அல்ட்ராஸ் பெயர் பெற்றுவிட்டது.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

டாடா அல்ட்ராஸ் காரில் சாதாரண வகை 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில், டாடா அல்ட்ராஸ் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு விரைவில் விற்பனைக்கு கொடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு முதல் ஆண்டு நிறைவு பெறும் இந்த நாளில், அல்ட்ராஸ் காரின் டர்போ மாடல் இன்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலானது i-Turbo என்ற பிராண்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் என மூன்று வேரியண்ட் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய டாடா அல்ட்ராஸ் கார் ஹை ஸ்ட்ரீட் கோல்டு, மிட்டவுன் க்ரே, டவுன்டவுன் ரெட், அவெனியூ ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகள் மட்டுமின்றி புதிய ஹார்பர் புளூ என்ற வண்ணத் தேர்விலும் வர இருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் இந்த எஞ்சின் இனி அல்ட்ராஸ் காரிலும் வழங்கப்பட உள்ளது. அதேநேரத்தில், இந்த எஞ்சின் நெக்ஸான் எஸ்யூவியில் 118 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும் நிலையில், அல்ட்ராஸ் காரில் 108 பிஎச்பி பவரையும், 140 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வழங்கும் வகையில் குறைத்து ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண பெட்ரோல் மாடலைவிட 24 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வழங்க வல்லது.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. பின்னர், டிசிடி கியர்பாக்ஸ் தேர்விலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 11.9 வினாடிகளில் எட்டும் திறன் வாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக வருவது குறிப்பிடத்தக்கது. டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் லிட்டருக்கு 18.13 கிமீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து இயக்கும்போது அதிகபட்சமான செயல்திறனை வழங்கும். சஸ்பென்ஷன், பிரேக்குகளில் எந்த மாற்றங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் டிசைனில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால், இது டர்போ மாடல் என்பதை காட்டுவதற்கான பிரத்யேக பேட்ஜ், கருப்பு வண்ண க்ரி்ல அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கும். எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கருப்பு வண்ண கூரை, புதிய கருப்பு - சாம்பல் வண்ண இன்டீரியர் தீம், செயற்கை லெதர் இருக்கைகள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வாய்ஸ் கமாண்ட் நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, விரைவாக குளிர்ச்சியை வழங்கும் எக்ஸ்பிரஸ் கூல் வசதி, ஹார்மன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படுகிறது.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

இந்த காரில் வழங்கப்பட உள்ள ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மூலமாக, கார் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியில் செல்லாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங், கார் திருடுபோனால் இருப்பிடத்தை கண்டறியும் வசதி, அருகிலுள்ள சர்வீஸ் மையம் குறித்த தகவலை தெரிந்து கொள்வதற்கான பல வசதிகளை பெற முடியும். அதேபோன்று, புதிய அல்ட்ராஸ் காரில் வாய்ஸ் கமாண்ட் வசதியும், காரில் ஏற்படும் பழுதுகள் குறித்த தகவல்களை பெறும் வசதிகளும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும்.

பவர்ஃபுல் எஞ்சின், கனெக்டெட் கார் நுட்பம்... புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் வெளியீடு... ஹூண்டாய் ஐ20 டர்போவுக்கு செம போட்டி!

வரும் 22ந் தேதி புதிய டாடா அல்ட்ராஸ் காரின் விலை விபரம் வெளியிடப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. முன்பதிவு நாளை முதல் துவங்கப்படுகிறது. டீலர்களில் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. ரூ.11,000 செலுத்தி புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஹூண்டாய் ஐ20 டர்போ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ ஆகிய கார் மாடல்களுக்கு இந்த புதிய அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் மிக சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Tata Motors has unveiled Altroz i-Turbo car in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X