டாடா காரா இது... மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது!!

டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரை டெல்லியைச் சேர்ந்த ஓர் இளைஞர் மிகவும் முரட்டுதனமான தோற்றம் கொண்ட வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய டாடா அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது...

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் அல்ட்ராஸ் காரும் ஒன்று. இது ஓர் அதிக பாதுகாப்பு திறன் மிக்க காரும் கூட. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் ஐந்திற்கு ஐந்து என்ற நட்சத்திர ரேட்டிங்கை இக்கார் பெற்றது. ஆகையால், இதில் பயணிக்கும்போது பாதுகாப்புகுறித்து சிறிதளவும் அச்சமின்றி பயணிக்கலாம்.

மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய டாடா அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது...

இத்தகைய சிறப்புமிக்க காரையே இந்தியாவில் ஓர் இளைஞர் அட்டகாசமான வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார். டாடா அல்ட்ராஸ் ஓர் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் கார் ஆகும். ஆகையால், இதன் தோற்றம் மிகவும் கவர்ச்சியானதாகவும், மனதை மயக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய டாடா அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது...

இதனைக் கூடுதலாக்குகின்ற வகையிலேயே டெல்லியைச் சேர்ந்த அந்த நபர் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் வாயிலாக மிகவும் முரட்டுத்தனமான காராக அல்ட்ராஸ் காரை மாற்றியமைத்திருக்கின்றார். இதனால், மிகவும் சாதுவான தோற்றத்தை மட்டுமே வழங்கி வந்த அல்ட்ராஸ் கார் தற்போது ஓர் முரடனைப் போன்று காட்சியளிக்கின்றது.

மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய டாடா அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது...

உருமாறியிருக்கும் டாடா அல்ட்ராஸ் கார் பற்றிய வீடியோவை 47 நேஷன் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இது வெளியிட்ட வீடியோவின் வாயிலாக அல்ட்ராஸ் காரின் உருமாற்றம் பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரியவந்திருக்கின்றது.

மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய டாடா அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது...

மாடிஃபிகேஷனால் டாடா அல்ட்ராஸ் கார் உயர்நிலை மாடலைப் போன்றும் மாறியிருக்கின்றது. இதற்காக, எல்இடி மின் விளக்குகள், புதிய ஸ்பீக்கர்கள், காரின் முன்பக்கத்தில் ஸ்பிளிட்டர்கள், கருப்பு மற்றும் நீல நிறத்திலான வீல் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய டாடா அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது...

இதுபோன்ற உடல் பாகங்களினாலயே டாடா அல்ட்ராஸ் மிகவும் முரடனைப் போன்று காட்சியளிக்கின்றது. இதுதவிர காரின் உட்பகுதியிலும் சில தனித்துவமான மாற்றங்கல் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், புதிதாக தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் ஹைபர்சோனிக் சிஸ்டம் ஆகும்.

மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய டாடா அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது...

இதனுடேயே 4 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, பன்நிறங்கள் கொண்ட ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஆர்ம்ரெஸ்ட் போன்ற சிறப்பு வசதிகளும் இக்காரில் கூடுதலாக பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த மாற்றங்களுக்கு சுமார் 1.2 லட்ச ரூபாய் வரை அதன் உரிமையாளர் செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

மிக கவர்ச்சியான வாகனமாக மாறிய டாடா அல்ட்ராஸ்... இதன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது...

இந்த மிகப்பெரிய தொகையைக் கொண்டே டாடா அல்ட்ராஸ் காரை அதன் உரிமையாளர் விலையுயர்ந்த வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார். இந்த கார் இந்தியாவில் ரூ. 5.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Image Courtesy: 47 NATION

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்விலும் இந்த பிரீமியம் கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. எக்ஸ்இசட்(ஓ), எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்டி ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதுமட்டுமின்றி 29 விதமான தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகிறது.

Most Read Articles

English summary
Tata Altroz Modified Into most attractive vehicle. Read In Tamil.
Story first published: Saturday, February 20, 2021, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X