டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

ஹேட்ச்பேக் கார் வாங்க இருப்போர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் வேரியண்ட் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

இந்திய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாகவும், அதிக பாதுகாப்பு கொண்ட மாடல் என்ற பெருமையையும் டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த மாற்றுத் தேர்வாகவும் இருந்து வருகிறது.

நவீன யுக டிசைன், சிறந்த எஞ்சின் தேர்வுகள், வசதிகள் ஆகியவற்றுடன் சவாலான விலையில் கிடைப்பதால், வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது டாடா அல்ட்ராஸ் கார். தற்போது பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் டாடா அல்ட்ராஸ் கிடைத்து வருகிறது.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

இந்த நிலையில், அதிசெயல்திறன் மிக்க டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் டாடா அல்ட்ராஸ் கார் வரும் 13ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த காரின் முக்கிய விபரங்களை டீம் பிஎச்பி தளம் மூலமாக தகவல்கள் கசிந்துள்ளன.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ மாடலானது அல்ட்ராஸ் ஐ-டர்போ என்ற பெயரில் வர இருக்கிறது. இந்த காரில் எக்ஸ்எம் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் என இரண்டு வேரியண்ட் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளது.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ கார் டவுன்டவுன் ரெட், அவெனியூ ஒயிட், ஹை ஸ்ட்ரீட் கோல்டு, மிட்டவுன் க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் மட்டுமின்றி, புதிய ஹார்பர் புளூ என்ற வண்ணத் தேர்விலும் வர இருக்கிறது. இந்த புதிய நீல வண்ணத் தேர்வு தனித்துவமான தேர்வாக இருக்கும்.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, வாய்ஸ் கமாண்ட் ஆகிய வசதிகள் இருக்கும்.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

மேலும், எஞ்சின் ஸ்ட்ராட் - ஸ்டாப் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் டைம் அசிஸ்ட் வசதி, ஐட்லிங் ஸ்டார்ட் - ஸ்டாப் ஆகிய வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

சாதாரண பெட்ரோல் எஞ்சினைவிட 28 சதவீதம் கூடுதல் பவரையும், 24 சதவீதம் கூடுதல் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெற்றிருக்கும். சிட்டி மற்றும் ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகள் இடம்பெற்றிருக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 13 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும்.

டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது!

இந்த காில் கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், பிரதிபலிப்பு இல்லாத உட்புற ரியர் வியூ மிரர்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

Most Read Articles

English summary
Tata Altroz Turbo key details like variants, features and specifications details Leaked onilne.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X