Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினியிடம் ஆணையம் கண்டிப்பாக விசாரிக்கும் - வக்கீல்
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குறிப்பிட்ட டாடா கார்களுக்கு ரூ.65,000 வரையில் சலுகைகள்...! மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே!!
குறிப்பிட்ட சில டாடா கார்களுக்கான மார்ச் மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே செல்லுப்படியாகும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள தள்ளுபடி சலுகைகளில் டியாகோ, டிகோர் நெக்ஸான் மற்றும் ஹெரியர் கார்கள் உட்படுகின்றன.

இந்த சலுகைகளின்படி மேற்கூறப்பட்ட டாடா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.15,000ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.65,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

இந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் டாடாவின் பிரதான மாடலாக விளங்கும் நெக்ஸானிற்கு ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய வாகனத்தை கொடுத்து நெக்ஸானை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.15,000 வரையில் சேமிக்கலாம்.

அதேநேரம் நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த எக்ஸ்சேன்ஞ் சலுகையினை பெற முடியும். எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனைக்கு கிடைக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விலைகள் ரூ.7.10 லட்சத்தில் இருந்து ரூ.12.80 லட்சம் வரையில் உள்ளன.

டாடா மோட்டார்ஸின் பிரபலமான ஹேட்ச்பேக் காரான டியாகோவிற்கு ரூ.25,000 வரையிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.15,000 மதிப்பிலான வாடிக்கையாளர் திட்டம் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் அடங்குகின்றன.

மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் ஒரே ஒரு பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே டியாகோ விற்பனைக்கு கிடைக்கிறது. மலிவான டாடா காரான டியாகோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.85 லட்சத்தில் இருந்து ரூ.6.85 லட்சம் வரையில் உள்ளன.

காம்பெக்ட் செடான் ரக கார் மாடலான டிகோருக்கு டியாகோவை காட்டிலும் சற்று அதிகமாக ரூ.30,000 வரையிலான சலுகைகளை டாடா அறிவித்துள்ளது. இதில் ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் வாடிக்கையாளர் திட்டம் அடங்குகின்றன.

இந்த செடான் காரின் விலைகள் ரூ.5.50 லட்சத்தில் இருந்து ரூ.7.64 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சஃபாரியின் ஐந்து-இருக்கை வெர்சனான டாடா ஹெரியருக்கு வேரியண்ட்களை பொறுத்து சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, கமோ & டார்க் எடிசன்களுடன் ஹெரியரின் எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட்ஏ+ வேரியண்ட்களுக்கு ரூ.40,000 வரையில் எக்ஸ்சேன்ஞ் போனஸும், மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.40,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் உடன் ரூ.25,000 மதிப்பிலான வாடிக்கையாளர் திட்டம் என அதிகப்பட்ச ரூ.65,000 வரையிலான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாடா ஹெரியர் வேரியண்ட்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.14 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.20.46 லட்சம் வரையில் உள்ளன. கடந்த 1ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த சலுகைகள் ஏற்கனவே கூறியது போல் மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும்.