விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

விற்பனையில் 50 ஆயிரம் என்கிற மைல்கல்லை டாடா ஹெரியர் எஸ்யூவி கார் கிட்டத்தட்ட எட்டிவிட்டது. ஆனால் இதற்கு விற்பனையில் போட்டியாக உள்ள எம்ஜி ஹெக்டர் சரிவை கண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

நடுத்தர-அளவு எஸ்யூவி கார் பிரிவு தற்சமயம் ஏகப்பட்ட மாடல்களை கொண்டுள்ளது. இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் முதன்மையானவைகளாக விளங்குகின்றன.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

இந்த இரு நிறுவனங்களில் இருந்து டாடா ஹெரியர்-சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர்-ஹெக்டர் ப்ளஸ் என்கிற இரட்டை மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹெரியருக்கும், சஃபாரிக்கு இடையிலும், ஹெக்டருக்கும், ஹெக்டர் ப்ளஸிற்கு இடையிலும் நீளம் மட்டுமே மிக முக்கியமான வித்தியாசமாக உள்ளது.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

ஏனெனில் அதிக பேர் அமரக்கூடிய கார்களாக சஃபாரி மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கொண்டுவரப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் கூடுதல் இருக்கை வசதி கொடுக்கப்படுவதால், ஹெரியருடன் ஒப்பிடுகையில் சஃபாரியின் பின்பக்கமும், ஹெக்டருடன் ஒப்பிடுகையில் ஹெக்டர் ப்ளஸின் பின்பக்கமும் சற்று வித்தியாசப்படுகின்றன.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

இந்த நான்கு மாடல்கள் தான் இந்திய நடுத்தர-அளவு எஸ்யூவி பிரிவில் முக்கியமான மாடல்களாக பலத்த போட்டிக்கு மத்தியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில், பிரிட்டிஷ் கார் பிராண்டான எம்ஜி-இன் இந்த இரட்டை கார்களின் விலைகள் டாடா இரட்டை கார்களை விட அதிகமாக உள்ளன.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

இதுவே இவை இரண்டிற்கான போட்டியில் டாடா மோட்டார்ஸ் பெரும்பாலும் வெற்றி பெறுவதற்கு காரணமாகும். கடந்த 2021 செப்டம்பர் மாத விற்பனையிலும், டாடா ஹெரியர் & சஃபாரி கார்கள் எளிதாக எம்ஜி இரட்டை கார்களை முந்தியுள்ளன. கடந்த செப்டம்பரில் 2,821 ஹெரியர்கள், 1,500 சஃபாரி கார்கள் என சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தம் 4,321 யூனிட் டாடா இரட்டை எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

அதுவே எம்ஜி-இன் இரட்டை எஸ்யூவி கார்கள் இரண்டும் சேர்த்து 2,722 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எம்ஜி இரட்டை-எஸ்யூவி கார்களின் விற்பனையை கடந்த மாதத்தில் டாடா ஹெரியர் என்ற ஒற்றை மாடலே முந்தியுள்ளது. இதேபோன்று முன்பு கடந்த 2021 மே மாத விற்பனையில் நடந்தது.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

2021 மே மாதத்தில் 1,231 யூனிட்களில் எம்ஜி ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், டாடா ஹெரியர் 1,360 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது. இவ்வாறு சஃபாரியின் உதவி இல்லாமலேயே எம்ஜி ஹெக்டருக்கு டாடா ஹெரியர் சரியான போட்டியாக இருந்து வந்துள்ளது. ஹெரியரின் 6 & 7-இருக்கை வெர்சனாக டாடா சஃபாரி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

இதே 2021 பிப்ரவரியில் எம்ஜி பிராண்டில் இருந்து ஹெக்டர் ப்ளஸ் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சஃபாரியின் வருகைக்கு பிறகு நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸின் பலம் மேலும் உயர்ந்தது. இதன்பின் 2021 மார்ச் மாதத்தை தவிர்த்து மற்ற அனைத்து மாதங்களிலும் விற்பனையில் எம்ஜி இரட்டை-எஸ்யூவி கார்களை காட்டிலும் டாடா இரட்டை-எஸ்யூவி கார்களின் விற்பனையே அதிகமாக இருந்துள்ளது.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் எம்ஜி ஹெக்டர் கார்களின் விற்பனை ஒரேடியாக 4,720 யூனிட்களை தொட்டது. ஒரு மாதத்தில் எம்ஜி ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் கார்கள் அதிகப்பட்சமாக விற்பனை செய்யப்பட்டிருப்பது இந்த மார்ச் மாதத்தில் தான். இந்த விற்பனை எண்ணிக்கையை டாடா மோட்டார்ஸின் இரட்டை-எஸ்யூவி கார்கள் கூட இதுவரையில் முந்தவில்லை.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

இத்தகைய விற்பனை எண்ணிக்கையை சஃபாரி விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட அடுத்த மாதத்திலேயே எம்ஜி மோட்டார் நிறுவனம் பெற்றிருப்பதுதான் இதில் ஹைலைட்டே. இதில் இருந்து டாடா நிறுவனத்திற்கும், எம்ஜி நிறுவனத்திற்கும் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் பிரிவில் ஒருவித பனிப்போர் உள்ளதை அறியலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை நெருங்கும் டாடா ஹெரியர்!! எம்ஜி ஹெக்டர் தடுமாற்றம்

ஒட்டு மொத்தமாக எம்ஜி நிறுவனம் 69,193 ஹெக்டர் & ஹெக்டர் ப்ளஸ் கார்களை அவற்றின் அறிமுகத்தில் இருந்து விற்பனை செய்துள்ளது. டாடா ஹெரியர் எஸ்யூவி கார் அதன் அறிமுகத்தில் இருந்து இதுவரையில் 49,398 யூனிட்களும், சஃபாரி மாடல் 13,718 யூனிட்களும் என டாடா இரட்டை-எஸ்யூவி கார்கள் மொத்தமாக 63,116 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Tata Harrier and Safari beat the MG twins in 2021 Sep monthly sales.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X