ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெரியரை இந்திய சந்தையில் 2019 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்கும் ஹெரியருக்கு க்ரெட்டா, சொனெட் உள்ளிட்டவை விற்பனையில் போட்டியாக உள்ளன.

ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

ஹெரியருக்கு கணிசமான அளவில் வரவேற்பு கிடைத்து வருவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தைரியமாக அதன் 3-இருக்கை வரிசை வெர்சனாக சஃபாரியை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. அதேநேரம் கணிசமான அப்டேட்களுடன் மை2021 ஹெரியரும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

அப்டேட்கள் மட்டுமின்றி ஹெரியரின் வேரியண்ட்கள் வரிசையும் புதிய ட்ரிம்கள் மற்றும் டார்க் எடிசன் மூலமாக விரிவுப்படுத்தப்பட்டன. ஸ்டாண்டர்ட் ஹெரியரை காட்டிலும் ப்ரீமியம் வெர்சனாக கொண்டுவரப்பட்ட டார்க் எடிசன் எக்ஸ்டி, எக்ஸ்டி+, எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட்+, எக்ஸ்.இசட்.ஏ மற்றும் எக்ஸ்.இசட்.ஏ+ உள்ளிட்ட ட்ரிம்களில் கிடைத்து வந்தது.

ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

அதில் தற்போது சன்ரூஃப் உடன் வழங்கப்படாத எக்ஸ்.டி, எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ ட்ரிம்களில் ஹெரியர் டார்க் எடிசன் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி சன்ரூஃப் உடன் வழங்கப்படும் மற்ற மூன்று ட்ரிம்களில் தான் இந்த ஸ்பெஷல் எடிசனை பெற முடியும்.

ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

அதேபோல், ஹெரியர் டார்க் எடிசன் கார்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் ரூ.17.87 லட்சத்தில் (எக்ஸ்டி+) இருந்து ரூ.20.81 லட்சம் (எக்ஸ்.இசட்.ஏ+) வரையில் மாறியுள்ளன. ஆனால் டாடா ஹெரியர் எஸ்யூவி காரை ரூ.14.29 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்தே வாங்கலாம்.

ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

முற்றிலும் கருப்பு நிற பெயிண்ட்டை பெறுவதுடன் ஹெரியரின் டார்க் எடிசன் ஸ்மோக்டு ஹெட்லேம்ப் உள்ளீடுகள், முன் மற்றும் பின்பக்கத்தில் கருப்பு நிறத்தில் ஃபாக்ஸ் சறுக்கு தட்டு, கருப்பு நிறத்தில் 17 இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் டார்க் எடிசன் என்பதற்கான முத்திரை உள்ளிட்டவற்றையும் பெறுகிறது.

ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

உட்புறத்தில் டேஸ்போர்ட் மர பலகையில் புதிய ப்ளாக் ஸ்டோன் மேட்ரிக்ஸ் உள்ளீடுகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் கருப்பு நிறத்தில் லெதர் இருக்கைகள் மற்றும் கதவுகளின் உட்புறத்தில் க்ரே நிற தையல், கதவுகளின் உட்பக்க கைப்பிடிகளில் துளையிடப்பட்ட டிசைனில் கருப்பு நிற லெதர் என மொத்த கேபினும் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது.

ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

மற்றப்படி ஸ்டாண்டர்ட் ஹெரியருக்கும், அதன் டார்க் எடிசனுக்கும் இடையே இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் இரண்டிலும் ஒரே விதமான 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் தான் வழங்கப்படுகிறது.

ஹெரியர் டார்க் எடிசனை இனி சன்ரூஃப் உடன் மட்டுமே வாங்க முடியும்!! அதிரடி நடவடிக்கையை எடுத்தது டாடா!

அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Tata Harrier Dark Edition Now Offered Only With Sunroof-Variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X