ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

ஏப்ரல் மாத விற்பனையில், எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் இரட்டையர்களை, டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி வீழ்த்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களும் கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளன.

ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 1,514 சஃபாரி எஸ்யூவிக்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் 1,712 ஹாரியர் எஸ்யூவிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த 2 கார்களின் விற்பனை எண்ணிக்கை 3,226 ஆக உள்ளது. எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் ஆகிய 2 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது அதிகமாகும்.

ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

எம்ஜி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 2,147 ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிக்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 1,079 யூனிட்கள் குறைவாகும். டாடா ஹாரியர், சஃபாரி எஸ்யூவிகளின் ஆதிக்கம் வரும் மாதங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு எஸ்யூவிகளும் ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில், டாடா ஹாரியர் இரண்டு வரிசைகளை கொண்ட எஸ்யூவி ஆகும். இதன் மூன்று வரிசைகள் கொண்ட வெர்ஷன்தான் டாடா சஃபாரி. இந்த இரண்டு எஸ்யூவிகளும் பல்வேறு அம்சங்களில் ஒன்று போலவே உள்ளன.

ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

இந்த இரண்டு கார்களிலும் 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இந்த இரண்டு எஸ்யூவிகளிலும் 2 டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

இதில், புதிய டாடா சஃபாரி எஸ்யூவி கடந்த பிப்ரவரி மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் கிராவிட்டாஸ் என்ற பெயரில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் சஃபாரி என்ற மிகவும் பிரபலமான பெயருடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

தற்போது இந்த புதிய எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதற்கு சஃபாரி என்ற பெயரும் மிக முக்கியமான காரணமாக உள்ளது. பழைய டாடா சஃபாரி வைத்திருந்த பலரும் தற்போது புதிய டாடா சஃபாரியையும் சொந்தமாக்கி வருகின்றனர். குறிப்பாக பிரபலங்கள் பலர் புதிய சஃபாரியை வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.

ஏப்ரல் மாத சேல்ஸ் தூள்... எம்ஜி ஹெக்டர் இரட்டையர்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்-சஃபாரி கூட்டணி...

அடுத்ததாக இந்த செக்மெண்ட்டில் ஹூண்டாய் அல்கஸார் விற்பனைக்கு வரவுள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் மூன்று வரிசை வெர்ஷன் ஆகும். கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக இந்தியா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அல்கஸாரின் அறிமுகம் தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Harrier, Safari Beats MG Hector Twins In April 2021 - Here Are All The Details. Read in Tamil
Story first published: Tuesday, May 4, 2021, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X