சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

டாடா ஹாரியர் எஸ்யூவியைவிட அதன் 7 சீட்டர் மாடலாக வந்துள்ள சஃபாரி சிறந்த மதிப்பை அளிக்கும் விஷயங்களை பெற்றிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

அதிக மதிப்பு

டாடா ஹாரியர் 5 சீட்டர் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டாடா சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவி நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.14.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்துள்ள இந்த 7 சீட்டர் மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், ஹாரியர் எஸ்யூவியைவிட அதிக மதிப்பை சஃபாரி வழங்குகிறது.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

'பெரிய' கார்

டாடா ஹாரியர் எஸ்யூவியைவிட புதிய சஃபாரி எஸ்யூவி பரிமாணத்தில் 60 மிமீ கூடுதல் நீளமும், 80 மிமீ கூடுதல் உயரத்துடன் பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹாரியர் எஸ்யூவியில் 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்படும் நிலையில், சஃபாரியில் 18 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், பெரிய கார் தோற்றத்தை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

இருக்கை வசதி

ஹாரியர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், புதிய சஃபாரி எஸ்யூவியில் 6 பேர் மற்றும் 7 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

6 சீட்டர்

அடிக்கடி வியாபார ரீதியாக நீண்ட தூர பயணங்கள் செல்வோருக்கு நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் கொண்ட 6 சீட்டர் மாடல் சிறந்ததாக இருக்கும். அதாவது, ஓட்டுனர் வைத்து செல்லும்போது நடுவரிசையில் அமர்ந்து செல்லும்போது ஆசுவாசமான உணர்வை தரும்.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

7 சீட்டர்

சிறியவர்கள் கொண்ட குடும்பத்தினர் அவ்வப்போது பயணிப்பதற்கு 7 சீட்டர் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், கடைசி வரிசை இருக்கைகளில் பெரியவர்களுக்கு நெருக்கடியாக இருக்கும். ஆனால், குறைந்த தூர பயணங்களின்போது அட்ஜெஸ்ட் செய்து சென்றுவிடலாம்.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

கூடுதல் வசதிகள்

டாடா ஹாரியர் எஸ்யூவியில் இல்லாத சில கூடுதல் அம்சங்கள் சஃபாரியில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோ டிம் வசதியுடன் உட்புற ரியர் வியூ மிரர், 70 கிலோ சுமை தாங்கும் வலிமை கொண்ட ரூஃப் ரெயில்கள் ஆகியவை சஃபாரிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கின்றன.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

பூட்ரூம் இடவசதி

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 425 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. ஆனால், புதிய சஃபாரியில் 70 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி மட்டுமே உள்ளது. அதேநேரத்தில், சஃபாரி எஸ்யூவியின் மூன்றாவது வரிசையை மடக்கினால் 447 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும். அதாவது, 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும்போது ஹாரியரைவிட கூடுதல் இடவசதியை அளிக்கிறது. அதேபோன்று, இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கும்போது, ஹாரியரில் 810 லிட்டர்கள் பூட்ரூம் இடவசதியும், சஃபாரியில் 910 லிட்டர் பூட்ரூம் இடவசதியும் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

எஞ்சின் விபரம்

டாடா ஹாரியர் மற்றும் புதிய சஃபாரி எஸ்யூவிகளில் ஒரே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி!

விலையும் சவாலாக நிர்ணயம்

டாடா ஹாரியர் எஸ்யூவியின் எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டைவிட சஃபாரி எக்ஸ்இ வேரியண்ட் ரூ.69,500 மட்டுமே கூடுதல் விலையில் வந்துள்ளது. மூன்றாவது வரிசை இருக்கை கூடுதலாக கிடைப்பதுடன், பல கூடுதல் வசதிகளையும் சஃபாரி பேஸ் வேரியண்ட் கொடுக்கிறது. அதேபோல, எக்ஸ்எம்/ எக்ஸ்எம்ஏ வேரியண்ட்டுகள் விலை ரூ.70,000 மட்டுமே கூடுதலாக இருக்கிறது. எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி ப்ளஸ் வேரியண்ட்டுகளின் விலை ரூ.95,000 வரையிலும், எக்ஸ்இசட் வேரியண்ட் விலை ரூ.1.35 லட்சம் வரையிலும், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் வேரியண்ட்டுகளின் விலை முறையே ரூ.95,000 மற்றும் ரூ.1 லட்சம் வரை மட்டுமே கூடுதலாக இருப்பதும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்கும் விஷயமாகவே குறிப்பிடலாம்.

Most Read Articles

English summary
Here are the some key differences between Tata Harrier and new Tata Safari.
Story first published: Tuesday, February 23, 2021, 12:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X