நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

நெக்ஸனின் நான்கு டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இது தொடர்பான தனது அறிக்கையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

டாடா மோட்டார்ஸின் இந்த அறிக்கை, நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்பதை கூறுவதுபோல் தான் அமைந்துள்ளது.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

ஏனெனில் இந்த அறிக்கை வெளிவந்துள்ள அதேநேரம் டாடா மோட்டார்ஸின் ஆன்லைன் புக்கிங் ப்ளாட்ஃபாரத்தில் நெக்ஸானின் டீசல் வேரியண்ட் வரிசையில் எக்ஸ்.இ, எக்ஸ்.எம்.ஏ, எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ+ (எஸ்) என்ற நான்கு ட்ரிம்-களின் பெயர்கள் காட்டப்படவில்லை.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

ஆனால் இந்த அறிக்கையின் மூலம் டாடா நிறுவனம் என்ன கூறவந்துள்ளது என்பது உண்மையில் சரியாக புரியவில்லை. ஏனெனில் வாடிக்கையாளர்களின் தேவை அதிகளவில் டீசல் கார்களின் மீது தான் உள்ளது. நெக்ஸானிலும் டீசல் வேரியண்ட்களின் மீது தான் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளது.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

அதேநேரம், சில வேரியண்ட்கள் நிறுத்தப்படவுள்ளன என்றும் இதே அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வேரியண்ட்கள் என்னென்ன என்பதை டாடா குறிப்பிடவில்லை. டீசல் வேரியண்ட்கள் தான் முக்கியமானவை என கூறும் டாடாவின் இணைய முன்பதிவு தளத்தில் நான்கு டீசல் ட்ரிம்களின் பெயர்கள் இல்லை.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

மேலும் அறிக்கையிலேயே நெக்ஸானின் வேரியண்ட்கள் வரிசையில் தற்போதைக்கு 12 பெட்ரோல் வேரியண்ட்களும், 8 டீசல் வேரியண்ட்களுக்கும் உள்ளன என டாடா குறிப்பிட்டுள்ளது. இப்படி இந்த அறிக்கையில் ஒரு தெளிவு இல்லாமலே உள்ளது.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

முன்பதிவு பக்கத்தில் ட்ரிம்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதினால் அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு வருகிறது என்றும் தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும். இன்னமும் இந்த விஷயத்தில் ஒரு புரிதல் ஏற்படவில்லை என்றால், அருகில் உள்ள டாடா டீலர்ஷிப் மையத்தினை அணுகி விரிவாக கேட்டு கொள்ளவும்.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து அதன் கார்களின் வேரியண்ட்களின் வரிசையை ஒழுங்குப்படுத்துவது, காரில் சில புதிய வசதிகளை கொண்டுவருவது, சில வசதிகளை நீக்குவது என சமீப காலமாக அவ்வப்போது அப்டேட்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

இந்த வகையில் முழு தொடுத்திரை உடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 5-இன்ச்சில் புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை டாடா அதன் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் கொண்டுவந்ததை கடந்த மாதங்களில் பார்த்தோம். சமீபத்தில் கூட 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸானின் பழைய மேற்கூரை தண்டவாள டிசைனிற்கே டாடா சென்றுள்ளது.

நெக்ஸானின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்படுகிறதா? என்ன கூறுகிறது டாடா மோட்டார்ஸ்?

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக காம்பெக்ட் எஸ்யூவி பிரிவு தான் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிரிவில் நெக்ஸானிற்கு விற்பனையில் கடுமையான போட்டி மாடல்களாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், ஹூண்டாய் வென்யூ உள்ளன.

Most Read Articles

English summary
Reportage published on some media platforms has led to rumors about Tata Motors discontinuing its Nexon diesel range.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X