டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடலில்?

டாடா நிறுவனம் அதன் கருப்பு பதிப்பு (Dark Edition) கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள்குறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் பிரபலமான கார் மாடல்களில் கருப்பு பதிப்பு (Dark Edition) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் முக்கியமான கார் மாடல்களாக கருதப்படும் அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் இவி மற்றும் ஹாரியர் ஆகிய கார் மாடல்களிலேயே கருப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

புதிய கருப்பு பதிப்பு கார்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து அவற்றிற்கான புக்கிங் பணிகளும் நாடு முழுவதும் தொடங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளம் மற்றும் டீலர்கள் வாயிலாக புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

அனைத்து கருப்பு பதிப்பு வாகனங்களும் அந்தந்த மாடலின் உயர்நிலை வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கருப்பு பதிப்பு கார்களின் சிறப்பே, அந்த கார்களின் பெரும்பாலான பாகங்கள் மற்றும் உடற்கூறுகளுக்கு கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பதே ஆகும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இதன் வீல்கள் உட்பட பல்வேறு முக்கிய கூறுகளுக்கு கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

அல்ட்ராஸ் கருப்பு பதிப்பு, இந்த காரின் உட்பகுதியின் பெரும் பகுதியை கிரானைட் கருப்பு நிறம் ஆக்கிரமித்துள்ளது. அதேசமயம், காரின் இருக்கைக்கு அடர் நீல நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், டெகோ நீல நிற தையல் மற்றும் முக்கொம்பு வடிவ பெர்ஃபாரேஷன் ஆகியவை அந்த இருக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

இத்தகைய வசதிக் கொண்ட அல்ட்ராஸ் கர்ப்பு பதிப்பு, எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்டில் மட்டும் விற்பனைக்குக் கிடைக்கிறது. நெக்ஸான் கருப்பு பதிப்பு காரில் அடுப்பு கரி நிறத்திலான அலாய் வீல், டார்க் மஸ்காட், சோனிக் சில்வர் ஹைலைட்டுகள் மற்றும் கிராணைட் கருப்பு நிறத்திலான மேட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

நெக்ஸான் கருப்பு பதிப்பு எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட்ஏ ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ்(ஓ) மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ்(ஓ) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

நெக்ஸான் இவி கருப்பு பதிப்பு, நெக்ஸான் இவி எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகிய இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த காரின் வெளிப்பகுதிக்கு நடுராத்திரி கருப்பு நிறம் மற்றும் சேடின் கருப்பு நிறம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

இத்துடன் கூடுதலாக நெக்ஸான் இவி கருப்பு பதிப்பு எக்ஸ்இசட் ப்ளஸ் காரில், பின்னிருக்கைக்கும் கோப்பை தாங்கியுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு பதிப்பு ஹாரியர் காரில் ஒபெரான் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடர் நீல நிறமும் அந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டாடாவின் கருப்பு பதிப்பு கார்கள் இந்தியாவில் அறிமுகம்! 4 பிரபல மாடல்களில் மட்டுமே கிடைக்கும்! எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

இதன் காரின் அலாய் வீல் ஆர்18 கருப்பு கல் நிறத்தில் காட்சியளிக்கின்றது. இதன் உட்பகுதியில் பிரீமியம் கருப்பு தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பெனெக்கே கலிகோ லெதர் போர்வை கொண்ட கார் இருக்கை, அடர் கருப்பு நிற தையல் உள்ளிட்டவை அந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Motors launched dark edition Altroz, Nexon, Nexon EV, Harrier Cars In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X