ஹாரியர், சஃபாரி மாடல்களில் அதிக வசதி கொண்ட புதிய தேர்வு அறிமுகம்! விற்பனையை அதிகரிக்க டாடாவின் தரமான முயற்சி!

டாடா நிறுவனம் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த புதிய தேர்வு குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் இரு புகழ்வாய்ந்த கார் மாடல்களில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரு மாடல்களில்தான் ஓர் புதிய தேர்வை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

எக்ஸ்டிஏ-ப்ளஸ் (XTA+) எனும் புதிய தேர்வை இரு கார் மாடல்களிலும் டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வசதிக் கொண்ட தேர்வு ஆகும். இவ்விரு வசதிகளையே சிறப்பு வசதிகளாக எக்ஸ்டிஏ ப்ளஸ் தேர்வில் டாடா வழங்கியிருக்கின்றது.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

டாடா ஹாரியர் கார் மாடலில் கிடைக்கும் எக்ஸ்டிஏ-ப்ளஸ் தேர்விற்கு அறிமுக விலையாக ரூ. 19.34 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா சஃபாரி கார் மாடலில் விற்பனைக்கு வந்திருக்கும் எக்ஸ்டிஏ-ப்ளஸ் தேர்விற்கு ரூ. 20.08 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

இதுவும், எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த உச்சபட்ச விலையிலேயே சிறப்பு வசதிகளுடன் புதிய தேர்வு இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த தேர்வில் விற்பனைக்கு வந்திருக்கும் இரு (சஃபாரி மற்றும் ஹாரியர்) கார் மாடல்களுக்கும் இந்திய வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

இதனடிப்படையிலேயே இன்றைய (செவ்வாய்கிழமை) தினம் இரு கார் மாடல்களிலும் புதிய எக்ஸ்டிஏ-ப்ளஸ் தேர்வு விற்பனைக் களமிறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எஸ்யூவி கார் சந்தையில் சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய இரு கார் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக டாடா மோட்டார்ஸ் கூறியிருக்கின்றது.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

மேலும், முதல் காலாண்டில் ஒட்டுமொத்த எஸ்யூவி கார் விற்பனையில் 41.2 சதவீத பங்கினை வகித்ததாகவும் அது கூறியுள்ளது. இந்த டிமாண்டை எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகப் பெற புதிய எக்ஸ்டிஏ-ப்ளஸ் தேர்வு உதவியாக இருக்கும் என டாடா நம்புகின்றது. புதிய எக்ஸ்டிஏ-ப்ளஸ் தேர்வில் எந்தவொரு டிசைன் மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

புரொஜக்டர் ஹெட்லேம்ப், இரட்டைப் பயன்பாட்டு வசதிக் கண்ட எல்இடி பகல்நேர மின் விளக்கு, ஆர்17 அலாய் வீல்கள், 7 இன்சிலான தனித்தீவு போன்ற தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை புதிய எக்ஸ்டிஏ-ப்ளஸ் தேர்வில் இடம் பெற்றிருக்கின்றன.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் சிறப்பு வசதியாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், தானியங்கி ஹெட்லேம்ப், புஷ் ஸ்டார்ட் பட்டன், தானியங்கி டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல், மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர் என பல்வேறு பிரீமியம் வசதிகள் டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

தொடர்ந்து, அதிக பாதுகாப்பான பயணத்திற்காக இரு ஏர் பேக் காரின் முன் பக்கத்திலும், அட்வான்ஸ்ட் இஎஸ்பி, பனி மின் விளக்கு மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை வழக்கமான அம்சங்களாக இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, சஃபாரி எக்ஸ்டிஏ-ப்ளஸ் தேர்வில் ஐஆர்ஏ இணைப்பு, மன நிலைக்கு ஏற்ப மின் விளக்கு, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் வசதி உள்ளிட்டவை இடம் பெறும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

டாடா ஹாரியர் எக்ஸ்டி-ப்ளஸ் மற்றும் சஃபாரி எக்ஸ்டிஏ-ப்ளஸ் ஆகிய இரு கார் மாடல்களிலும் 2.0 லிட்டர் கைரோடெக் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2.0 டிசைன் மொழியில் உருவாக்கியிருக்கின்றது. மேலும், தனது சொகுசு உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர் டி8 ஆர்கிடெக்சர் பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது.

ஹாரியர், சஃபாரி கார் மாடல்களில் புதிய தேர்வு அறிமுகம்... விற்பனையை அதிகரிக்க டாடாவின் புதிய முயற்சி! இதோட ஸ்பெஷல் என்ன?

ஆகையால், கவர்ச்சி மற்றும் பிரீமியம் வசதிகளுக்கு சற்றும் குறைவில்லா வாகனமாக டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் எஸ்யூவி கார்கள் இருக்கின்றன. இதனை மேலும் சிறப்பான தயாரிப்பாக மாற்றும் வகையிலேயே புதிய எக்ஸ்டிஏ-ப்ளஸ் தேர்வின் வருகை அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
Tata motors launches new xta plus variant in harrier and safari both suv
Story first published: Tuesday, August 10, 2021, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X