டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு உண்டான மரியாதையே போச்சு!! குஜராத்தில் என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க...

மேற்கூரையில் பொருத்தப்பட்ட காற்றாலையுடன் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் ஒன்று குஜராத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு உண்டான மரியாதையே போச்சு!! குஜராத்தில் என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க...

ராஜ்கோட் பதிவு எண் உடன் உள்ள இந்த டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் மேற்கூரையில் காற்றாலையானது, எங்களுக்கு தெரிந்தவரை காரின் பேட்டரி சார்ஜை நிரப்ப காற்றின் மூலம் மின்சாரத்தை பெறுவதற்காக பொருத்தப்பட்டிருக்கலாம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள யுடியூப் வீடியோவை தான் மேலே பார்க்கிறீர்கள். ஆனால் உண்மையில் இவ்வாறான காற்றாலையினால் நன்மையை காட்டிலும் காருக்கு ஏற்படும் தீமைகள் தான் அதிகமாகும்.

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு உண்டான மரியாதையே போச்சு!! குஜராத்தில் என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க...

ஏனென்றால் பொதுவாகவே கார்களில் அவற்றின் பரிமாண அளவுகளை சார்ந்துதான் அவற்றின் இயக்கம் வரையறுக்கப்பட்டிருக்கும். அதாவது காரின் தோற்றத்தை எந்த விதத்தில் மாற்றினாலும் அது நிச்சயம் காரின் இயக்கத்தை சிறிதாவது பாதிக்கதான் செய்யும்.

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு உண்டான மரியாதையே போச்சு!! குஜராத்தில் என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க...

அதிலும் இவ்வாறு மேற்கூரையில் அதிக எடை கொண்ட பொருட்களை செங்குத்தாக பொருத்தினால் சொல்லவே வேண்டாம், அது இயக்கத்தின்போது காரை அலையுற செய்தல், காரின் காற்று இயக்கவியலை சீர்க்குலைத்தல் போன்றவற்றை கொண்டுவருவது மட்டுமில்லாமல் டயரின் சுழற்சிக்கும் தடையாக அமையும்.

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு உண்டான மரியாதையே போச்சு!! குஜராத்தில் என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க...

குறிப்பாக அதி வேகங்களில் இந்த காரில் செல்ல முடியாது. அதேபோல் இயக்கத்தில் கார் அலைவுறும் என்பதால் மற்ற கார்களுக்கு அருகில் செல்வது விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும். இந்த வீடியோவில் கூட காரை ஓட்டுனர் அவ்வளவாக எந்த காருக்கும் அருகில் கொண்டு செல்லாததை பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு உண்டான மரியாதையே போச்சு!! குஜராத்தில் என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க...

எல்லாவற்றிக்கும் மேலாக கார் வழங்கும் மைலேஜும் குறையும். இதனால் இந்த நெக்ஸான் இவி காரில் காற்றாலை மூலம் பெறப்படும் ஆற்றலை காட்டிலும் காருக்கு அதிக மின்சார ஆற்றலை வழங்க வேண்டி இருக்கும். அதுமட்டுமின்றி இவ்வாறு தலைக்கு மேல் பாரத்தை வைத்து கொண்டு எவர் ஒருவரும் காரை இயக்க விரும்பமாட்டார்கள்.

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு உண்டான மரியாதையே போச்சு!! குஜராத்தில் என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க...

சரி, பேட்டரியின் சார்ஜை அதிகரிக்க சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்வதற்கு அடுத்து வேறு என்ன வழி இருக்கிறது என்று கேட்டால், மேற்கூரையில் இவ்வாறு காற்றாலையை பொருத்துவதற்கு பதிலாக சோலார் பேனல்களை பயன்படுத்தலாம். நம் நாட்டில்தான் சூரிய ஒளிக்கு பஞ்சமே இல்லையே. மேலும் இது பாதுகாப்பானது.

Most Read Articles

English summary
Tata Nexon Electric With Roof-Mounted Windmill Spotted In Gujarat
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X