Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

Tata Nexon EV எலெக்ட்ரிக் கார் ஒரே நாளில் வெகு நீண்ட தூரம் பயணித்த நிகழ்வுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவல்களைக் கீழே காணலாம், வாங்க.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் மிகவும் பாதுகாப்பான கார் மாடல்களில் நெக்ஸான் ( Nexon)-ம் ஒன்று. இந்த கார் மாடலை தழுவி நிறுவனம் ஓர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நெக்ஸான் இவி ( Nexon EV) கார் மாடலே அதுவாகும். இக்கார்குறித்த ஓர் ஆச்சரியமளிக்கும் தகவலே தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

ஐகுரு கிரேசி யுட்யூப் சேனலே நெக்ஸான் இவி குறித்த ஆச்சரியமளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இச்சேனலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரைக் கொண்டு ஹைதராபாத் டூ விஜயவாடா மீண்டும் விஜயவாடா டூ ஹைதராபாத் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

ஒற்றை நாளிலேயே இந்த பயணத்தை அவர் நிறைவு செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இரு முக்கிய நகரங்களுக்கு இடையேயான தூரம் 350கிமீ என கூறப்படுகின்றது. ஆகையால், பயணத்தைத் தொடங்கும் முன்னர் இளைஞர் தனது நெக்ஸான் இவி காரை 100 சதவீதம் முழுமையாக சார்ஜ் செய்திருக்கின்றார்.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

இவ்வாறு சுமார் 157 கிமீ தூரம் கடந்த பின்னர் காரின் சார்ஜ் அளவு 53 சதவீதமாக குறைந்திருக்கின்றது. இதையடுத்து, வழியில் இருந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தின் உதவி உடன் 95 சதவீதம் வரை மீண்டும் அக்காரை இளைஞர் சார்ஜ் செய்திருக்கின்றார். இதையடுத்து மீண்டும் பயணம் அவரின் தொடங்கியது.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

ஆரம்பத்தில் மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ வேகத்திலும், சார்ஜ் செய்த பின்னர் மணிக்கு 80 கிமீ வேகத்திற்கும் அதிக வேகத்தில் இளைஞர் நெக்ஸானை இயக்கியிருக்கின்றார். ஆகையால், அவர் விஜயவாடாவை அடைய 6 மணி நேரங்கள் எடுத்திருக்கின்றது. விஜயவாடாவை அடைவதற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை அவர் காரை சார்ஜ் செய்திருக்கின்றார். இம்முறை சுமார் 100 சதவீதம் அவர் சார்ஜேற்றியிருக்கின்றார்.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

ஆங்காங்கே நிறுத்தி காரை சார்ஜ் செய்த காரணத்தினால் சற்று கூடுதல் நேரம் எடுத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே வந்த வேகத்திலேயே மீண்டும் விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் அவர் புறப்பட்டிருக்கின்றார். முழுமையான சார்ஜ் காரில் இருந்ததால் விஜயவாடாவைக் கடந்த பின்னர் சார்ஜ் செய்துக் கொள்ளலாம் என நினைத்து அவர் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

ஆனால், அந்த இடத்தில் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவர் சென்ற நேரத்தில் சார்ஜிங் மையம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை. ஆகையால், வேறு இடத்தை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் மீதம் 50 கிமீ தூரம் மட்டுமே பயணிக்கின்ற அளவிற்கான பேட்டரி திறன் அக்காரில் இருந்தது. ஆனால், இளைஞரின் இலக்கோ 150 இடைவெளியில் இருந்தது.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

ஆகையால், நிச்சயம் வேறு சார்ஜிங் மையத்திற்கு சென்றே ஆக வேண்டும் என்ற நிலை அவருக்கு உருவாகியது. இதையடுத்து சுமார் 8 கிமீ தூரம் சுற்றியதில் அவருக்கு ஓர் சார்ஜ் மையம் கிடைத்தது. இவ்வாறே மிகவும் சுவாரஷ்யமான ஒரு நாள் பயணத்தை இளைஞர் தனது நெக்ஸான் இவி காரில் பெற்றிருக்கின்றார்.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

இந்த தகவல் டாடா நெக்ஸான் இவி கார் வாயிலாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே வெளியாகியிருக்கும் வீடியோ அமைந்துள்ளது. மேலும், மின்சார கார்கள் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இந்நிகழ்வு அமைந்துள்ளது. மின்சார கார்கள் பயன்படுத்தினால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது, போதியளவில் சார்ஜிங் மையங்கள் இல்லை, சார்ஜ் தீர்ந்துவிட்டால் தள்ளிக் கொண்டு வரும் நிலை உருவாகும் என்றெல்லாம் எண்ணங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றன.

இதனை எல்லாம் உடைக்கும் வகையில் தற்போதைய நிகழ்வு அமைந்துள்ளது. டாடா நெக்ஸான் இவி காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 305 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது இந்தியாவின் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். இதேபோல், நாட்டின் விலைக் குறைவான எலெக்ட்ரிக் காராகவும் இது இருந்தது. ஆனால், இந்த நிலை டாடா டிகோர் இவி எலெக்ட்ரிக் காரின் வருகைக்கு பின்னர் மாறியிருக்கின்றது.

Tata Nexon EV இவ்ளோ தூரம் பயணிக்குமா..! விஜயவாடா போன வேகத்திலேயே ஹைதராபாத் திரும்பிய எலெக்ட்ரிக் கார்!

ஆம், சற்று அதிக விலைக் கொண்ட காராக இது மாறியுள்ளது. 2021 டாடா டிகோர் இவி (Tata Tigor EV) எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாய் ஆகும். டாடா நெக்ஸான் இவி மின்சார காரின் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 13.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டிகோர் இவியைக் காட்டிலும் நெக்ஸான் இவியின் விலை ரூ. 2 லட்சம் அதிகமாக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Tata nexon ev travels 650 kms in a single day
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X