Just In
- 34 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா நெக்ஸான் காரில் படுக்கையறை வசதி... உங்க காரிலும் இந்த வசதியை பெறலாம்... எப்படி தெரியுமா??
டாடா நெக்ஸான் காரில் படுக்கையறை வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலையும், வீடியோவையும் இப்பதிவில் காணலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் நெக்ஸான் காரும் ஒன்று. இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட காராகும். குளோபல் என்சிஏபி அமைப்பு மேற்கொண்ட அதிக சவால்கள் நிறைந்த மோதல் பரிசோதனையில் தனது நிலையான உறுதித் தன்மையை நிரூபித்ததன் காரணத்தினால் இந்த ரேட்டிங்கை அது பெற்றது.

அதாவது, ஐந்திற்கு 5 என்ற பாதுகாப்பிற்கான நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. எனவேதான் நாட்டின் அதீத பாதுகாப்பு திறன்மிக்க காராக இது பார்க்கப்படுகின்றது. இக்காரையே இந்திய இளைஞர் ஒருவர் படுக்கையறை வசதிக் கொண்ட வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார்.

டாடாவின் இந்த நெக்ஸான் கார் சப்-4 மீட்டர் ரக காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலாகும். இந்த உருவ அமைப்பினாலேயே நெக்ஸான் கார் படுக்கையறை வசதி அப்கிரேஷனுக்கு மிக எளிதில் ஒத்துழைத்திருக்கின்றது. ஆமாங்க, இதன் அதிக இட வசதி மற்றும் பரந்த தோற்றம் படுக்கையறை மாற்றத்திற்கு முழுமையாக ஒத்துழைத்திருக்கின்றது.

பின்னிருக்கைகள் மடிக்கப்பட்ட நிலையிலேயே இக்காரை படுக்கையறை வசதிக் கொண்ட வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார் அதன் உரிமையாளர். அதாவது, பின் பக்கத்தில் பயணிகள் அமர்ந்து செல்ல உதவும் இருக்கைகளை மடக்கி, அதன் பின்னர் அதில் ஒருவர் மட்டும் படுக்கக் கூடிய வசதிக் கொண்ட மெத்தை விறிக்கப்படுகின்றது.

தொடர்ந்து, இருக்கைகள் மடிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு மேல் பகுதியில் முதுகை சாய்த்து வைப்பதற்கு ஏதுவாக இரு குஷன் தலையணைகள் அவ்விடத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன. இந்நேரத்தில் குஷன்கள் ஸ்டியரிங் வீல் பக்கம் சென்று விழுந்துவிட கூடாது என்பதற்காக டிரைவர் மற்றும் முன்பக்க பயணிகள் இருக்கைக்கு பின் பகுதியில் துணியால் உருவாக்கப்பட்ட ஓர் தடுப்பு சுவர் பொருத்தப்படுகின்றது.

அவ்வளவுதான் ஒரு நபர் உறங்கக் கூடிய படுக்கையறை ரெடி. இவ்வாறே டாடா நெக்ஸான் எஸ்யூவி காரை இளைஞர் படுக்கையறை வசதிக் கொண்ட காராக மாற்றியமைத்திருக்கின்றார். இதில், இரு சிறுவர்கள் தாராளமாக உறங்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பெரியவர்களால் அவ்வளவு சௌகரியமாக உறங்க முடியாது.

பெட்ரூம் வசதியுடன் உருமாறியிருக்கும் நெக்ஸான் கார் பற்றிய வீடியோ மற்றும் தகவலை ராகுல் சவுத்ரி எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது. வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இவ்வீடியோவின் வாயிலாகாவே விநோத டாடா நெக்ஸான் கார் பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

மேலும், நெக்ஸான் காரை படுக்கையறை வசதிக் கொண்ட காராக மாற்றியமைக்க பெரியளவில் மாற்றம் செய்ய தேவையில்லை என்பதையும் இவ்வீடியோ வெளிக் காட்டுகின்றது. டாடா நிறுவனம், இந்த எஸ்யூவி காரை மிக சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக சந்தையில் அறிமுகப்படுத்தியது.
பழைய பதிப்போடு ஒப்பிடுகையில், காரின் வெளியில் மற்றும் உட்புறத்தில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் விருப்பங்களிலும் இக்கார் கிடைக்கின்றது. இவ்விரு எஞ்ஜின்களும் பிஎஸ் 6 தரத்திற்கு இணக்கமானவை ஆகும்.