டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் டாடா சஃபாரி மீண்டும் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஏழு-இருக்கை எஸ்யூவி மாடலாக சாஃபாரியை கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

கிராவிட்டாஸ் என்ற பெயரில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த சஃபாரி அறிமுகத்திற்கு முன்பு தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வந்தது.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

அதேபோல் தற்போது முழுவதும் மறைக்க நிலையில் பொது சாலையில் சஃபாரி கார் ஒன்று சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

தயாரிப்பு நிறுவனங்கள் பொதுவாக இவ்வாறு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கார்களை சில காரணங்களுக்காக மீண்டும் சோதனையில் உட்படுத்தும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், புதிய என்ஜின் அல்லது புதிய வேரியண்ட்டை அந்த காரில் கொண்டுவருவதற்காக சோதனை ஓட்டம் இருக்கலாம்.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

சஃபாரியின் ஐந்து-இருக்கை வெர்சனான டாடா ஹெரியரில் பெட்ரோல் என்ஜினிற்கான தேவை உள்ளது. இதனால் ஹெரியரில் அறிமுகப்படுத்தும் அதேநேரத்தில் புதிய பெட்ரோல் என்ஜின் தேர்வு சஃபாரியிலும் கொண்டுவரப்படலாம்.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த புதிய பெட்ரோல் என்ஜின் தேர்வு டாடா மோட்டார்ஸ் நிறுவனமே தயாரிக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினாக இருக்கலாம். அதேநேரம் இந்த சோதனை சஃபாரி கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

ஏனெனில் இவ்வாறு புதிய என்ஜின் தேர்வை பெறவுள்ள கார்கள் அந்த என்ஜின் உடன் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்படுவது சகஜமானது தான். ஆனால் அத்தகைய சோதனை ஓட்டங்களில் வாகனம் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் தான் சோதனை செய்யப்படும்.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

எனவே தோற்றத்தில் சில மாற்றங்களுடன் டாடா சஃபாரியில் கொண்டுவரப்பட உள்ள புதிய வேரியண்ட்டிற்கான சோதனை ஓட்டமாக இது இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. சாஃபாரியின் விலை உயர்ந்த ட்ரிம்-ஆக அட்வென்ச்சர் பெர்சோனா உள்ளது.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

இதனை காட்டிலும் விலை உயர்ந்ததாக சாஃபாரியில் புதிய வேரியண்ட் கொண்டுவரப்படலாம். ஹெரியரில் டார்க் எடிசன் மற்றும் கமோ எடிசன்கள் உள்ளன. இவற்றை போன்று ஸ்பெஷல் எடிசனும் 7-இருக்கை சஃபாரியில் டாடா நிறுவனம் வழங்க வாய்ப்புள்ளது.

டாடா ஹெரியரை போல் சஃபாரியிலும் ஸ்பெஷல் எடிசனா?! கேமிரா கண்களில் சிக்கிய சோதனை சஃபாரி...

டாடா சஃபாரி எஸ்யூவி காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.70 லட்சத்தில் இருந்து ரூ.21.46 லட்சம் வரையில் உள்ளன. அதுவே இதன் ஐந்து-இருக்கை வெர்சனான ஹெரியரின் விலைகள் ரூ.14 லட்சத்தில் இருந்து ரூ.20.46 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles
English summary
Tata Safari Continues Testing Post Launch, New Variant Or Petrol Engine?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X