கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch! மலிவு விலையில் வரவிருக்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!

மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் Tata Punch மைக்ரோ எஸ்யூவி ரக கார் கரடு-முரடான (ஆஃப்-ரோடு) மலை பாதையில் திறம்பட செயல்படும் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி குறித்தும், கார் குறித்தும் கூடுதல் தகவல்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கார் மாடல்களில் ஒன்றாக Tata நிறுவனத்தின் Punch உள்ளது. இந்த காரின் அறிமுகம் மிக விரைவில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. ஆகையால், வரும் பண்டிகைக் காலங்களை அலங்கரிக்கும் வகையில் இதன் அறிமுகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Tata Punch கார் அறிமுகமாகலாம் என தெரிகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இக்கார்குறித்த சுவாரஷ்ய தகவல்கள் இணையத்தின் வாயிலாக வெளியாக தொடங்கியிருக்கின்றன. அண்மையில் இக்காரின் பெயர் பற்றிய தகவல் வெளியான நிலையில் தற்போது காரின் திறன் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

வாகனங்கள் இயங்க சாத்தியமற்ற ஓர் மலையின் மீது Tata Punch அட்டகாசம் செய்வதுபோல் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இவ்ளோ குட்டியான காருக்குள் இவ்ளோ திறமைகளா எனும் கூறுமளவிற்கு அதன் செயல்பாடுகள் இக்காட்சியின் வாயிலாக வெளியாகியுள்ளது.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

Tata நிறுவனத்தின் Punch ஓர் மைக்ரே (குட்டி) எஸ்யூவி ரக காராகும். இந்த காரை முன்னதாக H2X, HBX மற்றும் Hornbill என குறிப்பிட்டு வந்த நிலையில், இவையனைத்தும் இதன் பெயர் கிடையாது Punch-தான் இதன் பெயர் என Tata கடந்த 23ம் தேதி உறுதிப்படுத்தியது. இந்த பெயருக்கு ஏற்பவே கணிசமான மாறுபட்ட ஸ்டைலில் அக்கார் காட்சியளிக்கின்றது.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

அதேசமயம், தற்போது விற்பனையில் இருக்கும் Harrier எஸ்யூவி காரின் உருவ அமைப்பை இந்த கார் லேசாகப் பெற்றிருக்கின்றது. Tata Punch ஓர் ஐந்து இருக்கைகள் வசதிக் கொண்ட மைக்ரோ எஸ்யூவி ஆகும். இந்த காரை தனது இம்பேக்ட் டிசைன் 2.0 தாத்பரியத்தைப் பயன்படுத்தி Tata உருவாக்கியிருக்கின்றது.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

இக்காரின் கவர்ச்சியான வெளி தேற்றத்திற்காக ஹெட்லேம்ப் க்ளஸ்டர், எல்இடி டிஆர்எல்கள், முக்கொம்பு ஸ்டைலிலான எல்இடி தர வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. Punch சப்-4 மீட்டர் நீளத்தில் உருவாகியிருக்கின்றது. ஆகையால், இந்த சந்தையில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் பிற மாடல்களான Maruti S-Presso, Maruti Ignis, Mahindra KUV100 ஆகியவற்றிற்கு மிகக் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Image Courtesy: PowerDrift

Tata நிறுவனம் இந்த காரை நாம் எதிர்பார்த்ததைவிட மிக கவர்ச்சிகரமான வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. இதற்காக, ரேக்கேட் முகப்பு பகுதி விண்ட்ஷீல்டு, பக்கவாட்டு பகுதியில் கருப்பு கிளாடிங்குகள், செதுக்கப்பட்ட ஸ்டைலிலான பின் புற பகுதி மறஅறும் மிகவும் ஸ்டைலான ஆர்ச்சு போன்ற இரு நிற 15 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்டவை Punch இல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே Tata Punch இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜின் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோட்டார் அதிகபட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 1.2 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினிலும் Punch எதிர்பார்க்கப்படுகின்றது.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

இது அதிகபட்சமாக 100 எச்பி வரை திறனை வெளியேற்றும். இத்துடன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்ட தொடுதிரை, நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பன்முக கன்ட்ரோல்கள் அடங்கிய ஸ்டியரிங் வீல், இரு ஏர் பேக், ரியர் பார்க்கிங் கேமிரா, இபிஎஸ் உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் Tata Punch மைக்ரோ எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

கரடு-முரடான மலையை வேற லெவலில் சமாளித்த Tata Punch... மலிவு விலையில் எதிர்பார்க்கும் குட்டி எஸ்யூவிக்கு இவ்ளோ திறனா!!

இதுமட்டுமின்றி மிக மலிவான விலையில் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ரூ. 4.5 லட்சம் தொடங்கி ரூ. 8 லட்சம் வரையிலான விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபோன்று தொடர்ச்சியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஆஃப்-ரோடு சாலையில் Tata Punch திறம்பட செயல்படும் காட்சிகள் வெளியாகி அதன் எதிர்பார்ப்பாளர்களை வியக்க வைத்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Tata punch micro suv spied while doing off road testing
Story first published: Thursday, August 26, 2021, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X