இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

நடப்பு செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் கார்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

கடந்த ஆகஸ்டு மாதத்தைப் போலவே நடப்பு செப்டம்பர் மாதத்திலும் இந்தியாவில் சில புதுமுக வாகனங்கள் அறிமுகமாக இருக்கின்றன. அந்தவகையில், இந்திய வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் விரைவில் அறிமுகமாக இருக்கும் நான்கு புதுமுக வாகனங்களின் பட்டியலேயை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

நாம் பார்க்க இருக்கும் நான்கு கார் மாடல்களுமே இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் கார் மாடல்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அவைகுறித்த சிறப்பு தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

Tata Punch (டாடா பஞ்ச்) குட்டி எஸ்யூவி ரக கார்:

இந்தியர்கள் மத்தியில் பல மாதங்களாக எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் கார் மாடல்களில் ஒன்றாக Tata Punch (டாடா பஞ்ச்) இருக்கின்றது. இந்த காரை முதன் முதலில் கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே நிறவனம் காட்சிப்படுத்தியது. அப்போதில் இருந்தே இந்திய பட்ஜெட் வாகன பிரியர்களை இக்கார் கவர தொடங்கிவிட்டது. இதையடுத்து, சமீப காலமாக இக்கார்குறித்து வெளிவரும் தகவல்கள் மேலும் அதன் பக்கம் ஈர்க்கும் வகையில் அமைந்தது.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

டாடா மோட்டார்ஸ் இக்காரை மைக்ரோ எஸ்யூவி கார் சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அதாவது, மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோ மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கேஸ்பர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் நடப்பு செப்டம்பர் மாதத்தில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை டாடா சார்பாக வெளியிடவில்லை. அதேவேலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிக விரைவில் இது விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அறிமுகத்தை முன்னிட்டு சமீப காலமாக கார் குறித்த சுவாரஷ்ய மற்றும் முக்கிய தகவல்களை டாடா வெளியிட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

Force Gurkha (ஃபோர்ஸ் கூர்கா)

டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரை போலவே இந்திய வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கார் மாடல்களில் ஒன்றாக Force Gurkha (ஃபோர்ஸ் கூர்கா) இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் இந்த காரை இந்திய சாலையில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

இதன் அறிமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அரங்கேறியிருக்க வேண்டும். ஆனால், கோவிட் 19 வைரஸ் பரவல் இதற்கு ஆப்பு வைத்துவிட்டது. ஆகையால், தொடர்ச்சியாக தள்ளிப்போடப்பட்டு வந்த அறிமுகம் தற்போது செப்டம்பர் மாதத்திற்கு வந்திருக்கின்றது.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

எனவே நிச்சயம் வரும் தீபாவளியை அலங்கரிக்கும் வகையில் ஃபோர்ஸ் கூர்கா இந்த மாதம் அறிமுகமாகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹார்ட்கோர் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகன பிரிவில் இந்த வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

Volkswagen Taigun (ஃபோக்ஸ்வேகன் டைகுன்)

மிட் சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் Volkswagen Taigun (ஃபோக்ஸ்வேகன் டைகுன்) விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த காரின் உற்பத்தியை ஏற்கனவே நிறுவனம் தொடங்கிவிட்டது. இத்துடன் காருக்கான புக்கிங்கையும் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. ஆகையால், மிக விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இரு விதமான பெட்ரோல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (மேனுவல் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன்) மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ்) ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார் வரும் 23ம் தேதி அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

Ford EcoSport facelift (புதுப்பிக்கப்பட்ட ஃபோர்டு ஈகோஸ்போர்ட்)

Ford (ஃபோர்டு) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் EcoSport (ஈகோஸ்போர்ட்) மாடலும் ஒன்று. இந்த மாடலை தற்போது நிறுவனம் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே நாட்டில் மிக விரைவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாசம் இத்தனை கார்கள் அறிமுகமாக போகுதா?.. Tata Punch குட்டி எஸ்யூவி தொடங்கி Force Gurkha வரை!

புதுப்பித்தலின் வாயிலாக புதிய க்ரில் மற்றும் பம்பர், இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல அம்சங்களை புதுப்பித்தலின் வாயிலாக நிறுவனம் வழங்கியிருக்கின்றது. அவைகுறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிமுகத்தின்போது வெளியிடப்பட இருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata punch to force gurkha upcoming car launches in 2021 september
Story first published: Sunday, September 5, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X