ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு டாடா சஃபாரி காருக்கு புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

சர்வதேச ஆண்கள் தினத்தில் சஃபாரி காருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச ஆண்கள் தினம் இன்று (நவம்பர் 19) கொண்டாடப்படுகிறது. இந்த விளம்பரம் ஆண்களுக்காக 'டெடிகேட்' செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் ஆண்கள் டாடா சஃபாரி காரில், ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்வதை காண முடிகிறது.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

இது ஆண்களின் கடினமான மற்றும் முரட்டுத்தனமான குணாதிசயத்தை காட்டுகிறது. அதே நேரத்தில் இந்த விளம்பரத்தில் ஆண்கள் சமையல் செய்வது மற்றும் வீட்டை சுத்தம் செய்வது ஆகியவற்றையும் நம்மால் காண முடிகிறது. இது அவர்களின் 'செண்டிமென்ட்' பக்கத்தை காட்டுகிறது. இந்த விளம்பரத்தை நீங்கள் கீழே காணலாம்.

டாடா சஃபாரி காரில் ஆல் வீல் டிரைவ் வழங்கப்படுவதில்லை. இது ரியர் வீல் டிரைவ் எஸ்யூவி காரும் கூட கிடையாது. டாடா நிறுவனம் சஃபாரி காரை ஃப்ரண்ட் வீல் டிரைவ் தேர்வுடன் மட்டுமே விற்பனை செய்கிறது. டாடா சஃபாரி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, வாடிக்கையாளர்கள் இதனை ஒரு குறையாக கருதினர்.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

ஆனால் டாடா சஃபாரி காரின் விற்பனை தற்போது மெதுவாக உயர்ந்து கொண்டே வருகிறது. டாடா சஃபாரி காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தேவையில்லை என்பதை வாடிக்கையாளர்கள் உணர்ந்து கொள்ள தொடங்கியுள்ளனர். புதிய டாடா சஃபாரி கார், OMEGARC பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஹாரியர் கார் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

லேண்ட் ரோவரின் டி8 பிளாட்பார்மில் இருந்து OMEGARC பிளாட்பார்ம் தருவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 எஸ்யூவி கார்களின் ரைடு குவாலிட்டியும் தனித்துவமானதாக இருக்கிறது. டாடா சஃபாரி காரில் டீசல் இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இது ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இன்ஜின் ஆகும்.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

எம்ஜி ஹெக்டர் ட்வின்ஸ், டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களிலும் இதே இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2.0 லிட்டர் யூனிட் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதனை 'க்ரையோடெக்' என அழைக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் டாடா சஃபாரி காரின் ஆரம்ப விலை 14.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 23.17 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுடன் டாடா சஃபாரி போட்டியிட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் பன்ச் என்ற காரை விற்பனை செய்து கொண்டுள்ளது. வெகு சமீபத்தில்தான் டாடா பன்ச் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

டாடா பன்ச் கார் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களை தொடர்ந்து குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற 3வது டாடா கார் என்ற பெருமை பன்ச் காருக்கு உண்டு.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

தற்போது டாடா பன்ச் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பன்ச் கார்களை டெலிவரி பெற்று வருகின்றனர். டாடா பன்ச் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் டாடா பன்ச் கார் பக்கம் வாடிக்கையாளர்கள் சாய்வதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

ஆண்கள் தினத்திற்காக டாடா வெளியிட்ட வீடியோ... முரட்டுத்தனமும் இருக்கு... செண்டிமென்ட்டும் இருக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷனும் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. முதலில் சிஎன்ஜி வெர்ஷன்தான் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரலாம்.

Most Read Articles
English summary
Tata releases new safari advertisement
Story first published: Friday, November 19, 2021, 22:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X