புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

டாடா நிறுவனத்தின் பிரபல மின்சார கார் புதிய பெயர் மற்றும் அதிக ரேஞ்ஜ் (மைலேஜ்) திறனில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

டாடா நிறுவனம் டிகோர் மின்சார காரை புதுப்பிக்கப்பட்ட மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. புதுப்பித்தலின் அடிப்படையில் இக்காரின் பெயரையும் நிறுவனம் மாற்றியிருக்கின்றுத. எலெக்ட்ரிக் செடான் காருக்கு 'எக்ஸ் ப்ரெஸ்-டி இவி' எனும் பெயரை வைக்கவே நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

மிக விரைவில் புதிய பெயர் மற்றும் அம்சங்களுடன் எக்ஸ் ப்ரெஸ்-டி இவி மின்சார கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் பெயர் மட்டுமல்லாது ரேஞ்ஜ் திறனையும் டாடா அப்கிரேட் செய்திருக்கின்றது. முன்பு வழங்கியதைக் காட்டிலும் அதிக மின்சார சேமிப்பை செய்யக்கூடிய பெரிய பேட்டரியையே இக்காரில் பயன்படுத்தியிருக்கின்றது டாடா.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

இவ்வாறு பல்வேறு புதிய அம்சங்களுடனே விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் எக்ஸ் ப்ரெஸ்-டி இவி மின்சார காரின் விலைகுறித்த தகவலே தற்போது வெளியாகியுள்ளது. ரூ. 12.90 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு டாடா டிகோர் இவி மின்சார கார் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

மாற்றங்கள்

கணிசமான புதிய அணிகலன் அலங்கரிப்பை புதுப்பிக்கப்பட்ட டிகோர் பெற்றிருக்கின்றது. ஹெட்லைட்டிற்கு கீழே புதிதாக நீல நிற அணிகலன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, டாடாவின் பிற தயாரிப்புகளில் இடம் பெறுவதைப் போலவே புதிய திரிசூல அமைப்பிலான க்ரில்லும், இதே க்ரில்லில் டாடா லோகோவிற்கு மிக அருகில் சார்ஜிங் பாயிண்ட் வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

காரின் உட்பகுதியில் பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இருப்பினும், ஆங்காங்கே காரின் கேபின் பகுதியை கவர்ச்சியானதாக மாற்றும் வகையில் புதிய நீல நிற கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஹேண்ட்லிங் மற்றும் இருக்கை அமைப்பு ஆகியவற்றில் மிக லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

பேட்டரி பேக்

டாடா டிகோர் எக்ஸ் ப்ரெஸ்-டி இவி மின்சார காரில் 16.2kWh மற்றும் 21.5kWh இரு விதமான பேட்டரி பேக்குகள் வழங்கப்பட உள்ளன. இத்துடன், 70V 3 பேஸ் இன்டக்சன் மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 30kW (41எச்பி) மற்றும் 105 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

புதிய டாடா எக்ஸ் ப்ரெஸ்-டி இவி மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 213 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது அராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலாகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். மேலே பார்த்த ரேஞ்ஜ் விகிதம் டாப்-எண்ட் மாடலுடையதாகும்.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

புதுப்பிக்கப்பட்ட இந்த மின்சார காரை முழுமையாக சார்ஜ் செய்ய 11.5 மணி நேரங்கள் தேவைப்படுகின்றது. அதேசமயம், ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் இக்காரை சார்ஜ் செய்தால் வெறும் 2 மணி நேரங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

வேரியண்ட் விபரம்

எக்ஸ் ப்ரெஸ்-டி இவி மின்சார கார் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி ஆகும். இத்துடன், இரு வேரியண்டுகளிலும் 'ப்ளஸ்' எனும் தேர்வையும் கூடுதலாக டாடா வழங்க இருக்கின்றது. அதிக ரேஞ்ஜை குறிக்கக் கூடியதே இந்த ப்ளஸ். சற்று கூடுதல் கட்டணத்தில் இந்த அதிக ரேஞ்ஜ் வெளிப்படுத்தும் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..

இதுதவிர, ட்யூவல் ஏர்பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், எல்இடி மின் விளக்கு, 14 இன்சிலான ஸ்டீல் வீல், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், பவர் விண்டோ மற்றும் ஹார்மேன் ஆடியோ சிஸ்டம் என எக்கசக்க சிறப்பு வசதிகளை டாடா இக்காரில் வழங்க இருக்கின்றது. குறிப்பாக, உயர்நிலை வேரியண்டில் மிக அதிக சிறப்பு அம்சங்களை டாடா வழங்க இருக்கின்றது.

Source: Autocar India

Most Read Articles

English summary
Tata Reveals X Pres-T EV (Tigor EV Facelift) Price: Planning To Launch Soon. Read In Tamil.
Story first published: Saturday, April 17, 2021, 14:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X