Just In
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 13 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 13 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எங்கேயோ போகும் காத்திருப்பு காலம்! சஃபாரி காரை பெற எத்தனை நாள் காத்திருக்கணும் தெரியுமா?.. உற்சாகத்தில் டாடா!
டாடா சஃபாரி காருக்கான காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வெளியாகியிருக்கும் புதிய தகவலைக் கீழே காணலாம்.

டாடா நிறுவனத்தின் புதுமுக வாகனங்களில் சஃபாரி காரும் ஒன்று. இதனை மிக சமீபத்திலேயே நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அரசியல்வாதிகளின் மிகவும் பிரியமான கார் மாடல்களில் சஃபாரியும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இக்காரை விற்பனையில் இருந்து வெளியேற்றியது. இந்த நிலையிலேயே மீண்டும் புதிய உருவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இதனால், மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை டாடா சஃபாரி பெற்று வருகின்றது. இதன் விளைவாக இக்காருக்கான காத்திருப்பு காலம் உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தற்போது டாடா சஃபாரி காரை புக் செய்தால் 1 முதல் 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, நமது சென்னையில் இக்காருக்கு 1 முதல் 1.5 மாதங்கள் காத்திருப்பு காலம் நிலவுவதாக கார் தேக்கோ செய்தி தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதேபோன்று இந்தியாவின் பெருவாரியான நகரங்களில் காத்திருப்பு காலம் அதிகரித்த வண்ணமே இருப்பதாக அந்த செய்தியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக காசியாபாத் நகரத்தில் டாடா சஃபாரி காரை பெற 2 முதல் 2.5 மாதங்கள் காத்திருக்கும் நிலை உருவாகியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கடுத்தபடியாக தலைநகர் டெல்லி, ஹைதராபாத், லக்னோ, இந்தூர் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் காத்திருப்பு காலம் 2 மாதங்களாக நீடிக்கின்றன.

அமோகளவில் கிடைக்கப்பெற்று வரும் புக்கிங்கின் காரணத்தினால் இத்தகைய அதிகபட்ச நாட்கள் காத்திருப்பு காலம் ஏற்பட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. டாடா சஃபாரி கார் ரூ. 14.69 லட்சம் தொடங்கி ரூ. 21.45 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இக்காரை டாடா நிறுவனம் அதன் ஹாரியர் காரை தயாரிக்கும் அதே ஒமெகா-ஆர்க் பிளாட்பாரத்தில் வைத்தே தயாரித்து வருகின்றது. எனவே தொழில்நுட்பம், கவர்ச்சியான தோற்றம், ஆடம்பரம் என அனைத்திலும் கெத்து காட்டும் வாகனமாக இக்கார் இருக்கின்றது. குறிப்பாக, பாதுகாப்பை இரு மடங்கில் வழங்கக் கூடிய கருவிகளும் இக்காரில் அதிகளவில் இடம்பெற்றிருக்கின்றன.

டாடா சஃபாரி கார்கள் 9 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வகுகின்றது. இதுதவிர கூடுதலாக அட்வென்சர் பதிப்பு சஃபாரி காரையும் டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதனைத் தனித்துவமான நிறம் மற்றும் கூடுதல் அலங்கரிப்பு அணிகலன்களுடன் விற்பனைக்கு வழங்குகின்றது டாடா. தொடர்ந்து, காரின் உட்பகுதியான கேபினிலும் சில கூடுதல் சிறப்பு சொகுசு அம்சங்கள் மற்றும் பிரீமியம் அம்சங்களை டாடா வழங்குகின்றது.

டாடா சஃபாரி கார் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. தொடர்ந்து, 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நகரவாரியான காத்திருப்பு காலம் பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்.
நகரங்கள் | காத்திருப்பு காலம் |
புது டெல்லி | 2 Months |
பெங்களூரு | 1 Month |
மும்பை | 1 - 1.5 Months |
ஹைதராபாத் | 2 Months |
புனே | 1.5 - 2 Months |
சென்னை | 1 - 1.5 Months |
ஜெய்பூர் | 1 - 1.5 Months |
அஹமதாபாத் | 1.5 - 2 Months |
குர்காவுன் | 1 Month |
லக்னோ | 2 Months |
கொல்கத்தா | 1 Month |
தானே | 1 - 1.5 Months |
சூரத் | 1 Month |
காஸியாபாத் | 2 - 2.5 Months |
சண்டிகர் | 1.5 - 2 Months |
பாட்னா | 1 - 1.5 Months |
கோயம்பத்தூர் | 1 - 1.5 Months |
ஃபரிதாபாத் | 1 - 1.5 Months |
இந்தூர் | 2 Months |
நொய்டா | 2 Months |