சிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

டாடா நிறுவனம் அதன் பாதுகாப்பு வசதிகள் கொண்ட டியாகோ மற்றும் டிகோர் கார்களை சிஎன்ஜி தேர்வில் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இத்தரத்திலான கார்கள் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் டியாகோ மற்றும் டிகோர் கார் மாடல்களும் அடங்கும். இவ்விரு கார் மாடல்களும் அதீத பாதுகாப்பு திறன் கொண்டவை. பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட க்ராஷ் டெஸ்டில் இக்கார்கள் இரண்டும் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்கள் என்ற ரேட்டிங்கைப் பெற்றவையாகும்.

சிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

இத்தகைய சிறப்பு வாய்ந்த கார் மாடல்களின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக சிறப்பு நடவடிக்கைகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில், விரைவில் இந்த கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வை விரைவில் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

சிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிஎன்ஜி ரகத்திலான டிகோர் மற்றும் டியாகோ கார்களை சாலையில் பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது டாடா. அவ்வாறு, சமீபத்தில் இந்திய சாலையில் வைத்து சோதனையோட்டம் செய்தபோது எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கார் அண்ட் பைக் தளம் வெளியிட்டிருக்கின்றது.

சிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

சிஎன்ஜி தேர்வில் டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு வரவிருப்பதாக வெளியாகிய தகவல் டாடா கார் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இக்காரின் சோதனையோட்டம் புகைப்படங்கள் வெளியாகி கூடுதலாக ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது.

சிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

ஆனால், இந்த சிஎன்ஜி தரத்திலான டாடா கார்கள் இந்த வருடத்திற்கு பின்னரே விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை உருவத்தில் எந்தவொரு மாறுபாடின்றி, வழக்கமான டிகோர் மற்றும் டியாகோ கார்களைப் போன்றே காட்சியளிக்க இருக்கின்றன. ஆனால், எஞ்ஜின்கள் மட்டும் சிஎன்ஜி வாயுவால் இயங்கக் கூடிய எஞ்ஜினாக இருக்க உள்ளன.

சிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

தற்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கும் இந்த கார்கள் மறைப்புகளுடன் காட்சியளிக்கின்றன. இருப்பினும், இக்காரில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் தெரியவந்திருக்கின்றது. அந்தவகையில், முன்மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இக்கார்களில் புரஜெக்டர் ரகத்திலான ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், பனி விளக்கு, சுறா துடுப்பு போன்ற அமைப்பிலான ஆன்டனா, எல்இடி ஸ்டாப் லேம்ப், எல்இடி டெயில் லேம்ப் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

சிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

இவ்வாறு காரின் வெளிப்புறத்தில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பற்றிய தகவலை தெரிய வந்திருக்கின்றது. உட்பகுதியில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களைத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆகையால், இக்காரின் கேபின் பகுதியில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் பற்றிய தகவல் தெரிய வரவில்லை. விரைவில் இக்கார் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Tata Tiago And Tigor CNG Variants Spotted Testing Near Lonavala. Read In Tamil.
Story first published: Tuesday, February 16, 2021, 16:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X