எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்

இந்த கார்கள் ஒப்பீடு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். ஏனென்றால் எதிர்கால இந்திய போக்குவரத்தை நிர்ணயிக்க போவது இவையாக இருக்கலாம். இதில் Mercedes, Audi, BMW போன்ற லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் எதுவும் அடங்கவில்லை.

எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்

Tata Tigor EV, Nexon EV, MG ZS EV, Hyundai Kona என்ற பட்ஜெட் எலக்ட்ரிக் கார்களை பற்றியே இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இவை நான்கும் நடுத்தர வர்த்தகத்தினராலும் வாங்கக்கூடிய எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளன.

எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்

முதலில் இவை நான்கின் விலைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்துவிடுவோம். மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Tata Tigor EV-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலான விலைகள் இதற்கு நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

Model Prices (ex-showroom)
Tata Tigor EV ₹9-₹10 Lakh (estimated)
Tata Nexon EV ₹13.99 - ₹16.85 Lakh
MG ZS EV ₹20.99 - ₹24.18 Lakh
Hyundai Kona EV ₹23.79 - ₹23.97 Lakh
எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்

இந்த அட்டவணையின்படி பார்க்கும்போது இந்த நான்கு எலக்ட்ரிக் கார்களில் Tata கொண்டுவரும் மலிவான மாடலே எதிர்காலத்தில் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் பலரது முதன்மையாக எலக்ட்ரிக் கார் தேர்வாக இருக்கும் என தெரிகிறது.

எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்
Aspect Tata Tigor EV Tata Nexon EV MG ZS EV Hyundai Kona
Power 129 PS 129 PS 143 PS 136 PS
Torque 245 Nm 245 Nm 353 Nm 395 Nm
0-100 kmph NA 9.9 seconds 8.5 seconds 9.7 seconds
Electronically Limited Top Speed NA 120 kmph 140 kmph 155 kmph

இயக்க ஆற்றலை பொறுத்தவரையில், நான்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான மோட்டாரின் ஆற்றலையே கொண்டுள்ளன. அதிகப்பட்சம் என்று பார்த்தால், MG ZS EV-இல் அதன் விலைக்கு ஏற்ப 143பிஎஸ் வரையிலான ஆற்றல் கிடைக்கிறது. Tata Motors-இன் எலக்ட்ரிக் கார் இரண்டிலும் ஒரே அளவிலான செயல்படுதிறனே கிடைக்கும்.

எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்
Aspect Tata Tigor EV Tata Nexon EV MG ZS EV Hyundai Kona
Battery Pack 26 kWh 30.2 kWh 44.5 kWh 39.2 kWh
Warranty on Battery 8 year/1.60 Lakh kms 8 year/1.60 Lakh kms 8 year/1.5 Lakh kms 8 year/1.60 Lakh kms
Fast Charging Time 80 per cent in 60 mins 80 per cent in 60 mins 80 per cent in 50 mins 80 per cent in 57 mins
Slow/Normal Charging Time 80 per cent in 8.5 hours 100 per cent in 8 hours 100 per cent in 6 to 8 hours 100 per cent in 6 hours 10 mins

பேட்டரி ஆற்றலிலும் MG எலக்ட்ரிக் எஸ்யூவி காரே முன்னிலை வகிக்கிறது. புதிய வெளியீட்டான Tigor EV-இல் 26kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவே Nexon EV-இல் 30.2kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. ரேஞ்ச் எனப்படும் 100%-இல் இருந்து 0% வரையிலான சார்ஜில் கார் அதிகப்பட்சமாக இயங்கும் தூரத்தினை தென்கொரிய Hyundai நிறுவனத்தின் Kona EV (452 கிமீ) அதிகமாக கொண்டுள்ளது.

Model Range (ARAI-certified)
Tata Tigor EV 250 km (claimed)
Tata Nexon EV 312 km
MG ZS EV 340 km
Hyundai Kona EV 452 km
எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்

பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் Tata கார்கள் மிகவும் பாதுகாப்பானவை எனப்பட்டாலும், பாதுகாப்பு தொழிற்நுட்பங்களில் இந்த நான்கு எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான வித்தியாசங்களை கீழுள்ள அட்டவணையின்படி பார்க்கும்போது MG Motor மற்றும் Hyundai நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் கூடுதல் அம்சங்களை கொண்டவைகளாக விளங்குகின்றன.

Aspect Tata Tigor EV Tata Nexon EV MG ZS EV Hyundai Kona
Airbags 2 2 6 6
ABS with EBD Yes Yes Yes Yes
ESC N/A N/A Yes Yes
LED Headlights No No No Yes
Automatic Climate Control Yes Yes No Yes
Cruise Control No No Yes Yes
Auto-dimming IRVM No No No Yes
Touchscreen Infotainment Yes Yes Yes Yes
Connected Tech Yes Yes Yes No
Sunroof No Yes Yes (Panoramic) Yes
Ventilated Seats No No No Yes
Powered Driver Seats No No Yes Yes
Electronic Parking Brake No No Yes Yes
எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்

காம்பெக்ட் செடான் மாடலான Tigor EV-ஐ தவிர்த்து மற்ற மூன்றும் எஸ்யூவி உடலமைப்பை கொண்டவைகளாகும். இதனால் நீளம், அகலம், உயரம், வீல்பேஸ் என பரிமாண அளவுகள் அனைத்திலும் மற்ற மூன்றுடன் ஒப்பிடுகையில், Tigor மாடல் சிறியதாக உள்ளது. புதிய Tigor EV-இன் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் மற்றும் கெர்ப் எடை உள்ளிட்டவை இன்னும் நமக்கு தெரியவரவில்லை.

Aspect Tata Tigor EV Tata Nexon EV MG ZS EV Hyundai Kona
Length (mm) 3992 3993 4314 4180
Width (mm) 1677 1811 1809 1800
Height (mm) 1537 1606 1620 1570
Wheelbase (mm) 2450 2498 2585 2600
Ground Clearance (mm) NA 205 161 172
Kerb Weight (kg) NA 1400 1518 1535
எந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வது? ‘பட்ஜெட்’ விலையில் விற்பனையில் இருக்கும் 4 மாடல்கள்

எங்களது கருத்து

விலை-ரேஞ்ச் என இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் Tata Tigor EV வாங்கக்கூடிய விலையில், வாங்குவதற்கு ஏற்ற ரேஞ்ச் உடன் உள்ளது. இல்லை எனக்கு காரில் பாதுகாப்பு அம்சங்கள் தான் முக்கியம், அதேபோல் அளவிலும் கார் பெரியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால், MG ZS EV பக்கம் செல்லுங்கள்.

Most Read Articles

English summary
Tata Tigor EV vs Tata Nexon EV vs MGZS EV vs Hyundai Kona Compared.
Story first published: Sunday, August 29, 2021, 22:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X