மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

தெலங்கானா மாநிலத்தில் ஒரே நிறுவனம் சார்பில், 5 புதிய ரெனால்ட் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

ரெனால்ட் நிறுவனத்தின் டீலரான பிபிஎஸ் மோட்டார்ஸ், தெலங்கானா மாநிலம் எல்பி நகர், கொம்பள்ளி, மலக்பேட்டை, வாரங்கல் மற்றும் நிஸாமாபாத் ஆகிய 5 பகுதிகளில் 5 புத்தம் புதிய ஷோரூம்களை திறந்துள்ளது. ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பையடுத்து, இந்த புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

பிபிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து ரெனால்ட் ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்கள் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரை தற்போது டெஸ்ட் டிரைவ் செய்ய முடியும். அத்துடன் விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகள் வரும் மார்ச் 3ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் கடந்த பிப்ரவரி 15ம் தேதிதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

இந்த புதிய காருக்கு 5.45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற மிக சவாலான ஆரம்ப விலையை ரெனால்ட் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. ரெனால்ட் கைகர் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதற்கு இந்த சவாலான விலை நிர்ணயம் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ என மொத்தம் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டீசல் இன்ஜின் தேர்வு இல்லை. இந்த இன்ஜின்களுடன், 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 5 ஸ்டெப் சிவிடி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

இந்திய சந்தையில் கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி போட்டியிடுகிறது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

இதில், நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால், நிஸான் மேக்னைட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதைப்போலவே ரெனால்ட் கைகர் முன்பதிவுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த கைகர் கார்... ஒரே நிறுவனம் சார்பில் 5 ரெனால்ட் ஷோரும்கள் திறப்பு

இந்திய சந்தையில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புதிது புதிதாக இந்த செக்மெண்ட்டில் களமிறங்கி வருகின்றன. வரும் காலங்களிலும் இந்த செக்மெண்ட்டில் இன்னும் பல்வேறு நிறுவனங்கள் காலடி எடுத்து வைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Telangana: PPS Renault Opens 5 New Showrooms - Here Are All The Details. Read in Tamil
Story first published: Saturday, February 20, 2021, 19:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X