இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

எதிர்காலத்தில் உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் சாலைகளில் அதிகளவில் உலாவரக்கூடிய கார்களாக கணிக்கப்பட்டுள்ள டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் இந்திய சாலைகளிலும் அறிமுகமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஏனெனில் இந்த அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் அதன் பணிகளை துவங்கிவிட்டது.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

இதற்கு உதாரணமாக இதற்குமுன் ஏகப்பட்ட ஸ்பை படங்களையும், வீடியோக்களையும் பார்த்துள்ளோம். ஆனால் தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்கள், டெஸ்லா இந்தியாவில் அதன் சார்ஜிங் நெட்வொர்க்கையும் கட்டமைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை தெரியப்படுத்துகின்றன.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

டெஸ்லா க்ளப் இந்தியா என்ற டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த ஸ்பை படங்களில், மூடிய கட்டடம் ஒன்றிற்குள் டெஸ்லாவின் விரைவுசார்ஜர்கள் வைக்கப்பட்டுள்ளதை காணலாம். மேலும் இந்த டுவிட்டர் பதிவில், இந்த இரண்டு சூப்பர்சார்ஜர்கள், வி2 150 கிலோவாட்ஸ் நிலையங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் சார்ஜ் ஏற்றி கொள்ள தலா இரு ப்ளக்குகள் உள்ளன. ஒன்று டைப் 2, மற்றொன்று சிசிஎஸ்2 ஆகும்.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

இதில் ஒன்று பயன்பாட்டில் இருக்கும்போது மற்றொன்றை பயன்படுத்த இயலாதாம். இந்த விரைவு சார்ஜர்களை பயன்படுத்தி டெஸ்லா வாகனங்களை வெறும் 30 நிமிடங்களில் 5- 80% சார்ஜ் ஏற்றிவிடலாம் என டெஸ்லா தெரிவிக்கிறது. இந்த சூப்பர்சார்ஜர்களை நம் நாட்டில் தலைநகர் டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிறுவ எத்தகைய சாத்திய சூழல் உள்ளது என்பதை டெஸ்லா ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

இருப்பினும் உண்மையில் தற்போது இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சூப்பர்சார்ஜர்கள் அவற்றின் முந்தைய தலைமுறைகள் ஆகும். ஏனெனில் டெஸ்லா தனது முழு ஆதிக்கத்தை செலுத்திவரும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வி3 250 கிலோவாட்ஸ் சூப்பர்சார்ஜர்கள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் இரண்டாம் வெர்சனான 150 கிலோவாட்ஸ் சூப்பர்சார்ஜருக்கு இணையான விரைவு சார்ஜர் எதுவும் தற்சமயம் நம் நாட்டில் இல்லை.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

டெஸ்லா இந்தியாவில் களமிறக்க கடந்த சில வருடங்களாக முனைப்பு காட்டி வருவது உங்களுக்கு தெரிந்த விஷயமே. பெங்களூரில் கார்பிரேட் அலுவலகத்தை ஏற்கனவே பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவிட்ட டெஸ்லா, அதன் உலகளவில் பிரபலமான மாடல் 3 மற்றும் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார்களை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தி வருகிறது.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

முதற்கட்டமாக எலக்ட்ரிக் கார்களை முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் திட்டத்தில் டெஸ்லா உள்ளது. ஆனால் இத்தகைய வணிகத்தினால் வாகனத்தின் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் டெஸ்லாவிற்கு ஏற்படும். ஏனெனில் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து இருக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகப்படியான வரிகளை இந்திய அரசாங்கம் வசூலிக்கிறது.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

எலக்ட்ரிக் கார்களை சிபியூ முறையில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டெஸ்லா சார்பில் பல முறை மனு அளிக்கபட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுவதாக இல்லை. இறக்குமதி குறைத்தால் சவாலான விலைகளில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய தயார் என்கிற நிலைப்பாட்டில் தான் டெஸ்லா உள்ளது.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

மாடல் 3 மற்றும் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார்கள் உலகளவில் பிரபலமாகி இருந்தாலும், இந்திய சந்தைக்கு மாடல் 2 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் தான் ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவிலேயே தயாரித்தால், இந்த சொகுசு எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.20 லட்சத்திற்குள் நிர்ணயிக்க முடியும் என தெரிகிறது.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டுவிட்டரில் பெரும்பாலான நேரங்களில் செயல்பாட்டில் இருப்பவர். நெட்டிசன்களின் கருத்திற்கு விரைவாகவே பதிலளிக்கும் எலான் மஸ்க் இணையத்தில் வைரலாகும் விஷயங்களுக்கும் தனது கருத்தை பதிவிட்டு வருகிறார். இந்த வகையில் சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு டுவிட்டர் பதிலளித்திருந்த எலான் மீண்டும் தனது விரைவான மற்றும் சரியான பதிலளிக்கும் தன்மையை வெளிக்காட்டி இருந்தார்.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

தென்கொரியாவை சேர்ந்த டெஸ்லா மாடல் 3 கார் உரிமையாளரான அந்த நபர் தனது எலக்ட்ரிக் காம்பெக்ட் செடான் காரின் அமைப்புடன் தனது ஐபோனை இணைக்க முடியவில்லை என எலானை குறிப்பிட்டு புகார் தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனை அந்த சமயத்தில் உலகளவில் பல டெஸ்லா கார்களில் ஏற்பட்ட பிரச்சனையாக இருந்தது. கடந்த நவ.19ஆம் தேதி பல டெஸ்லா கார் உரிமையாளர்கள் தங்களது காரினை மொபைல்போன் செயலி உடன் இணைக்க முடியாமல் தவித்தனர்.

இந்தியாவில் டெஸ்லா சூப்பர்சார்ஜர்களுக்கு என்ன வேலை? சார்ஜிங் நிலையங்கள் உருவாகிறதா?

இதற்கு வெறும் 3 நிமிடங்களில் பதில் அனுப்பிய எலான் மஸ்க் முதலில், "சரிப்பார்க்கப்படுகிறது..." என தெரிவித்திருந்தார். அதன்பின் 5 நிமிடங்கள் கழித்து, சர்வரில் பிரச்சனை உள்ளதாக சில ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தார். எலானிடம் இருந்து இத்தகைய பதில்களை எதிர்பாராத அந்த தென்கொரிய நபர் இந்த பதில்களை கண்டு வெகுவாக நெகிழந்துபோய் விட்டார்.

Most Read Articles

English summary
Tesla Supercharger Spotted In India
Story first published: Wednesday, December 1, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X