பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று மக்களைக் கவரும் புதிய விலைக் குறைந்த எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

டெஸ்லா நிறுவனம் விற்பனைச் செய்து வரும் பிரலமான மின்சார கார் மாடல்களில் மாடல் ஒய் (Model Y)-ம் ஒன்று. இந்த மாடலிலேயே மிக குறைந்த விலைக் கொண்ட வேரியண்டை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டாண்டர்டு ரேஞ்ஜ் எனும் வேரியண்டை அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

முன்னதாக லாங் ரேஞ்ஜ் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் எனும் இரு வேரியண்டுகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தநிலையில் தற்போது புதிய வேரியண்ட் சேர்க்கப்பட்டிருக்கின்றது. புதிய வேரியண்ட் டெஸ்லா விற்பனைச் செய்து வரும் மலிவு விலை மின்சார காரான மாடல் 3-க்கு இணையான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

அதாவது மாடல் ஒய் வேரியண்டிற்கு 37,690 அமெரிக்க டாலர்கள் எனும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மாடல் 3 மின்சார காரின் ஆரம்ப விலையைக் காட்டிலும் 4 ஆயிரம் டாலர்கள் மட்டுமே அதிகம் ஆகும். ஆரம்ப நிலை மாடலாக கிடைக்கும் டெஸ்லா மாடல் 3 ஸ்டாண்டர்டு ரேஞ்ஜ் ப்ளஸ் மின்சார காரின் விலை 33,690 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

மாடல் ஒய் ஓர் செடான் ரக எலெக்ட்ரிக் காராகும். இது ஸ்போர்ட்ஸ் கார்களைப் போன்று அதிக திறனுடம் செயல்படக் கூடிய எலெக்ட்ரிக் காராகும். இந்த சிறப்பான மின்சார காரிலேயே குறைந்த ரேஞ்ஜ் வழங்கக்கூடிய மலிவு விலை மின்சார காரை டெஸ்லா அறிமுகம் செய்திருக்கின்றது.

பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

இக்காருக்கான புக்கிங் நடைபெற்று வருவதை டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ வலைதளம் உறுதி செய்கின்றது. மேலும், இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 392 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்கிற சிறப்பு தகவல்களும் அந்த தளத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

தற்போது டெஸ்லா மாடல் 3க்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதேமாதிரியான வரவேற்பையே மாடல் ஒய்-இடமும் பெற வேண்டும் என்கிற நோக்கிலேயே புதி குறைந்த விலை வேரியண்ட் ஸ்டாண்டர்டு ரேஞ்ஜ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

பல வருடங்களாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியர்கள் எதிர்பார்த்து வந்தநிலையில் விரைவில் டெஸ்லா மின்சார கார்கள் விற்பனைக்கு வருவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் உருவாகியிருக்கின்றன. ஆமாங்க இன்னும் ஓரிரு மாதங்களில் இந்நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன.

பிரபல மின்சார கார் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... மக்களை கவர பிரபல நிறுவனம் அதிரடி!!

இதுகுறித்த தகவலை அண்மையில் டெஸ்லா நிறுவனம் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆகையால், இந்திய மின்சார வாகன ஆர்வலர்கள் பெருத்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முதலில் மாடல் 3 மின்சார காரே நிறுவனத்தின்கீழே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், மாடல் ஒய் அறிமுகமாக சற்று கால தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Launched Cheaper Variant Of Model Y SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X