சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

டெஸ்லா நிறுவனம் சீனாவில் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட தனது கார்களை மீண்டும் தொழிற்சாலைக்கே திரும்ப அழைத்ததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

உலகின் மிக பெரிய சந்தைகளுள் ஒன்றான சீனாவில் சுமார் 285,000 வாகனங்களை டெஸ்லா திரும்ப அழைப்பதாக கடந்த வாரத்தில் அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்து இருந்தது. ஆட்டோ பைலட் சிஸ்டத்தில் ஏற்படும் பழுதுகளை தவிர்ப்பதற்காக இவ்வாறு டெஸ்லா வாகனங்கள் திரும்ப அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

அதன்பின் வெளிவந்த செய்திகள், இந்த பழுதை காரணம் காட்டி திரும்ப அழைக்கப்பட்ட கார்களில் இந்த ஆட்டோபைல்ட் பிரச்சனை இல்லை என கூறியன. இந்த நிலையில் தற்போது, இந்த கார்களில் க்ரூஸ் கண்ட்ரோல் செயல்பட துவங்கியதை ஓட்டுனருக்கு தெரிவிக்கும் விதத்தில் எழுப்ப வேண்டிய ஒலிக்கான அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளிவந்துள்ளன.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

இந்த இணைப்பு பணிகள் மிகவும் எளிமையானவை தான், என்றாலும் பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தை சார்ந்தது என்பதால் டெஸ்லா எந்தவொரு சமரசமும் இன்றி அதிக எண்ணிக்கையில் தனது கார்களை சீனாவில் திரும்ப அழைத்துள்ளது.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

மற்றப்படி சீனாவில் திரும்ப அழைக்கப்பட்ட டெஸ்லா கார்களில் எந்த பிரச்சனையும் இல்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. க்ரூஸ் கண்ட்ரோல் ஆக்டிவேட் ஆனது என்பதை ஓட்டுனருக்கு தெரிவிக்கும் நோக்கத்திலேயே இந்த எச்சரிக்கை மணியோசை வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

சீனாவில் டெஸ்லா சமீப காலமாக வாகனங்களின் பாதுகாப்பு தரம் குறித்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக, டெஸ்லா வாகனங்களின் ஆட்டோ பைலட் செயல்பாடு ஆராயப்படுகிறது. ஏனெனில் ஆட்டோ பைலட் அமைப்பில் ஏற்படும் பிரச்சனையினால் சில டெஸ்லா வாகனங்கள் சீனாவில் விபத்துகளை சந்தித்துள்ளன.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

சீனா மட்டுமின்றி அமெரிக்காவில் நடைபெற்ற டெஸ்லா கார் விபத்துகளையும் நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம். இதனால் ஆட்டோபைல்ட் பிரச்சனை டெஸ்லாவிற்கு மிக பெரிய தலைவலியாக உருவாகியுள்ளது. ஏனெனில் இந்த விபத்துகளில் ஏகப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

அதேநேரம் கார் ஓட்டுனர்கள் மீது பழி சுமத்தவும் டெஸ்லா நிறுவனம் மறக்கவில்லை. ஆட்டோபைலட் அமைப்பு வாகனத்தில் இருந்தாலும், ஓட்டுனர் தனது முழு கவனத்தையும் கார் இயங்குவதில் செலுத்த வேண்டும் என டெஸ்லா தெரிவிக்கிறது.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

ஏனெனில் சில டிரைவர்கள் கார் தன்னிச்சையாக இயங்கி கொண்டிருக்கும்போது டேஸ்போர்டை தட்டிக்கொண்டோ, அல்லது அப்படியே அங்கேயே தூங்கிக்கொண்டோ இருப்பதாக டெஸ்லா குற்றஞ்சாட்டி உள்ளது. இவ்வளவு ஏன், சில டிரைவர்கள் பின் இருக்கை பகுதி கூட செல்கின்றனர் என்கிறது டெஸ்லா.

சீனாவில் 285,000 கார்களை டெஸ்லா திரும்ப அழைத்ததற்கு உண்மை காரணம் இதுதானா? விபத்துகள் குறையுமா?

ஆட்டோபைல்ட் என்பது எதிர்கால தனிபயன்பாட்டு இயக்க தொழிற்நுட்ப வசதி ஆகும். எதிர்காலத்தில் தானாக இயங்கக்கூடிய டாக்ஸிகளை டெஸ்லா வெளியிடவுள்ளது என கூறுகின்ற டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க், கேமிராக்கள், ரேடார்கள் மற்றும் சென்சார்களை பொருத்துவது மூலம் தானியங்கி கார்களின் செயல்பாட்டில் மனிதர்கள் தலையிடுவதை தவிர்க்க முடியும் என நம்புகிறார்.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla recall in China may have been for adding chime to cruise control.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X