பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க

பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்து வரும் அதிக புகழ்மிக்க மின்சார கார் மாடலில் மிக பெரிய பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணத்தினால் அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை அந்நிறுவனம் திரும்பி எடுத்து வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்த சம்பவம் குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா (Tesla). இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் மாடல் 3 (Model 3), மாடல் எஸ் (Model S), மாடல் ஒய் (Model Y) மற்றும் மாடல் எக்ஸ் (Model X) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களை உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்தியாவில் இந்நிறுவனத்தின் மின்சார கார்கள் இன்னும் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

அதே நேரத்தில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில், தனது அதிக புகழ்மிக்க தயாரிப்புகளில் ஒன்றான மாடல் 3 எலெக்ட்ரிக் மிகப் பெரிய பிரச்னை ஒன்று ஏற்பட்டிருப்பதாகவும், ஆகையால், அந்த கார்களை திரும்பி நிறுவனத்திற்கு எடுத்து வருமாறும் டெஸ்லா உடனடி அழைப்பு விடுத்திருக்கின்றது.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மற்றும் அதிக சிறப்புகள் கொண்ட எலெக்ட்ரிக் காராக மாடல் 3 இருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த செடான் ரக மின்சார கார் விற்பனையில் இருந்து வருகின்றது. இந்த காரின் பின் பக்க கேமிராவிலேயே தயாரிப்பு பிரச்னை ஏற்பட்டிருக்கின்றது.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கருவியில் பிரச்னை ஏற்பட்டிருப்பதால் பயணிகளுக்கான பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே டெஸ்லா நிறுவனம் கோளாறு உள்ள அனைத்து மாடல்3 மின்சார கார்களையும் திரும்பி கொண்டு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்த அழைப்பு அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும்.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

அங்கு விற்பனைச் செய்யப்பட்ட சுமார் 4.75 யூனிட் டெஸ்லா மாடல் 3 மின்சார கார்களில் பிரச்னை ஏற்பட்டிருக்கின்றது. தயாரிப்பின்போது ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்னையை சரி செய்யும் பொருட்டே இந்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுவனம் திரும்பி எடுத்து வருமாறு டெஸ்லா நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கின்றது.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

டெஸ்லா நிறுவனம் அண்மையில் அதன் மின்சார கார்களுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் வழங்கியது. வெர்ஷன் 11.0 எனும் அப்டேட்டை வழங்கியது. 'ஹாலிடே சாஃப்ட்வேர் அப்டேட்' (Holiday Software Update) என்ற பெயரில் இந்த அப்டேட்டை மின் வாகன உற்பத்தி நிறுவனம் வெளியிட்டது.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

இந்த அப்டேட் லைட் ஷோ எனும் வசதியை வழங்கியது. இதுவே இந்த அப்டேட்டின் முக்கிய அம்சம் ஆகும். இந்த அம்சமானது, டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கும் மின் விளக்குகளை இசைக்கு ஏற்ப மின்மினுக்க வைக்க செய்யும். இது இசைக்கேற்ப மின் விளக்குகள் நடனமாடுவதைப் போன்று தோற்றுவிக்கும்.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

இத்தகைய மிக சிறப்பான அப்டேட்டையே டெஸ்லா நிறுவனம் வெர்ஷன் 11.0 வாயிலாக வழங்கியது. இதுமட்டுமின்றி நேவிகேஷன், விளையாட்டு (Games), பொழுதுபோக்கு (தொடுதிரையில் டிக்டாக் செயலியை பயன்டுத்தும் வசதி), ஆடியோ (முன்பைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பான வெளிப்பாட்டுடன்), பிளைண்ட் ஸ்பாட், ஆட்டோ பைலட்டின் போது கம்ஃபோர்டான சஸ்பென்ஷன் உள்ளிட்ட வசதிகளையும் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

டெஸ்லாவின் முதல் மின்சார கார் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டன. டெஸ்லா நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றான மாடல் 3 எலெக்ட்ரிக் காரே முதலில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

கேமிராவில் ஏற்பட்டிருக்கும் தயாரிப்பு பிரச்னையால் ஆபத்து அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கும் டெஸ்லா மாடல் 3 கார், அதிக உறுதியான உடல் கட்டமைப்பைப் பெற்றிருக்கின்றது. என்எச்டிஎஸ்ஏ நடத்திய பாதுகாப்பு குறித்த ஆய்வில் இந்த வாகனம் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது. மேலும், ஐஐஎச்எஸ் அதிக பாதுகாப்பான பிக்-ப்ளஸ் எனும் விருதையும் இந்த கார் பெற்றிருக்கின்றது.

பிரபல நிறுவனத்தின் மின்சார காரில் மிக பெரிய பிரச்னை! அரை மில்லியனுக்கும் அதிகமான கார்களை திரும்பி அழைச்சிருக்காங்க!

ஆகையால், இது விபத்தைச் சந்தித்தாலும் நல்ல பாதுகாப்பையே வழங்கும் என்பது தெரிகின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழுமையான சார்ஜில் 358 மைல் தூரம் பயணிக்கும். இது 576 கிமீட்டருக்கு சமம் ஆகும். ஏடபிள்யூடி இரட்டை மோட்டார் வசதி இதில் வழங்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Tesla recalls over 475000 unit model 3 e car in us
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X