விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

ஒரு வருட-காலாண்டில் டெஸ்லா அதன் அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கையை இந்த 2021ஆம் மூன்றாம் கால்பகுதியில் அடைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

பிரபலமான அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நடப்பு 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (ஜூலை- செப்டம்பர்) விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த விபரங்கள் எலக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவின் ஆதிக்கத்தை பறைச்சாற்றுவதாக உள்ளன.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட உலகளவில் 241,300 வாகனங்களை டெஸ்லா விற்பனை செய்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட இந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார்களில், மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் ஒய் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்கள் மட்டுமே மொத்தம் 237,823 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

மீதி 9,275 யூனிட்களில், மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்கள் அடங்குகின்றன. ஒரே ஆண்டின் காலாண்டில் டெஸ்லா நிறுவனம் அதிகப்பட்சமாக விற்பனை செய்துள்ள கார்கள் எண்ணிக்கை இதுதான் என ஏற்கனவே கூறிவிட்டோம். முன்னதாக இந்த சாதனையை இந்த 2021ஆம் இரண்டாம் பகுதியிலேயே டெஸ்லா எட்டி இருந்தது.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

நடப்பாண்டின் இரண்டாம் கால்பகுதியில் 201,250 டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையை இம்முறை மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்களே முறியடித்துவிட்டன. 2021 மூன்றாம் காலாண்டில் தயாரிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில், மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்கள் விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும் சற்று குறைவாக 228,882 யூனிட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

இவை இரண்டும் தான் தற்போதைக்கு உலகளவில் சிறப்பாக விற்பனை செய்யப்படும் டெஸ்லாவின் பிரதான மாடல்களாக விளங்குகின்றன. மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்கள் கடந்த 3 மாதங்களில் வெறும் 8,941 யூனிட்கள் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் தத்தளித்து வருகின்றன.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

ஆனால் இந்த அமெரிக்க இவி தயாரிப்பு நிறுவனம் இந்த நெருக்கடியால் பெரிதாக எந்த பாதிப்பையும் அடைந்தது போன்று தெரியவில்லை. அமெரிக்காவில் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்லா, இந்த சூழலை கருத்தில் கொண்டு தனது கார்களில் புதிய மைக்ரோ கண்ட்ரோலர்களை கொண்டுவந்தது.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

அதேபோல் புதிய சிப்-செட்களுக்கு இணக்கமானதாக மென்பொருள் திருத்தப்பட்டன. டெஸ்லா நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் அதன் தயாரிப்பு பணிகளில் எந்த தடையும் வராமல் பார்த்து கொண்டன. தற்சமயம் அமெரிக்காவில் டெக்ஸாஸிலும், ஜெர்மனியில் பெர்லினிலும் தனது ஜிகா தொழிற்சாலையை கட்டமைக்கும் பணியில் டெஸ்லா ஈடுப்பட்டு வருகிறது.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

டெஸ்லாவின் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றவுள்ள இந்த தொழிற்சாலைகளில் தயாரிப்பு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அதேநேரம் சில புதிய மாடல்களின் அறிமுகங்களிலும் டெஸ்லா ஈடுப்பட்டு வருகிறது. இதன்படி 2023ஆம் ஆண்டிற்குள் புதிய தலைமுறை ரோட்ஸ்டர் மற்றும் சைபர் ட்ரக் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

இந்திய சந்தையில் நுழைய டெஸ்லா பல ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறது. முற்றிலுமாக கார்களை இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து தயாரிக்க விரும்பும் டெஸ்லா நிறுவனம் அதன் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார்களை நம் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஈடுப்படுத்தி வருவது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

இதனால் முதலாவதாக இந்திய சந்தைக்கு இந்த இரு எலக்ட்ரிக் கார்கள் தான் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கிறோம். இவற்றை வெளிநாட்டு தொழிற்சாலைகளில் தயாரித்து சிபியூ முறையில் இறக்குமதி செய்தும் நம் நாட்டில் விற்பனை செய்யலாம். ஆனால் இந்த முறையினால் காரின் விலையினை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் டெஸ்லாவிற்கு உருவாகும்.

விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டெஸ்லா!! வெறும் 3 மாதங்களில் 2.41 லட்ச கார்கள் விற்பனை!

இதனால் தான் இந்தியாவிலேயே தொழிற்சாலையை அமைத்து கொள்ள மத்திய அரசாங்கமும் டெஸ்லாவை கேட்டு கொண்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் டெஸ்லா தொழிற்சாலை அமையும் என்பது தற்போதைக்கு கேள்வியாக உள்ளது. டெஸ்லாவை தன் பக்கம் இழுக்க தமிழக அரசும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் டெஸ்லாவின் இந்திய தொழிற்சாலை கர்நாடகாவில் அமைவதற்கே வாய்ப்புகள் உள்ளதாம்.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Recorded Its Highest Quarter-Yearly Sales In Q3 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X